பூரி மாவு பிசையும் போது இந்த 1 பொருளை சேர்த்து பிசைந்தால் ஒரு சொட்டு எண்ணெய் கூட குடிக்காது. பூரி சாஃப்டாக, உப்பி, நன்றாக சிவந்து கிடைக்கும்.

poori1
- Advertisement -

பூரி சுடுவது என்பது ஒரு கலை. இதை அவ்வளவு எளிதில் சரியான பக்குவத்தில் எல்லோரும் செய்து விட முடியாது. சிலபேர் பூரி சுட்டால் மொறுமொறுப்பாக இருக்கும். சில பேர் பூரி சுட்டால் உடனே அமுங்கிவிடும். ஹோட்டலில் செய்வது போல பக்காவான பூரியை நம்முடைய வீடுகளில் எப்படி செய்வது? சின்ன சின்ன ஐடியா இருக்குதுங்க. அதை தெரிஞ்சுக்கிட்டு முயற்சி செய்தாலே, சூப்பரான பூரியை நம்முடைய வீட்டிலும் செய்ய முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய அசத்தலான பூரி எப்படி சுடுவது. சின்ன சின்ன ஐடியாக்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

பூரி மாவு பிசையும் மெத்தட்:
சப்பாத்தி மாவு பிசைவதும், பூரி மாவு பிசைவதும் ஒன்று கிடையாது. சப்பாத்தி மாவு கொஞ்சம் இளகிய படி பிசையலாம். தவறு இல்லை. ஆனால் பூரி மாவை கட்டியாக தான் பிசைய வேண்டும். மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு, அதில் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர், கொஞ்சமாக எண்ணெய், கொஞ்சமாக ரவையை தூவி மாவை பிசைய வேண்டும்.

- Advertisement -

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து தான் பூரி மாவு பிசைய வேண்டும். 1 டம்ளர் அளவு கோதுமை மாவு எடுத்தால், அதற்கு 1 ஸ்பூன் அளவு ரவை சேர்த்து, பூரி பிசைந்தால் மாவு கட்டியாகவும் வரும். பூரி சுட்ட பிறகு நீண்ட நேரம் புசுபுசுவென உப்பலாகவே இருக்கும். போடி சாஃப்ட்டாக எண்ணெய் குடிக்காமல் வரும். பூரி மாவு பிசையும் போது கட்டியாக வரவேண்டும் என்று, ரொம்பவும் வரட்சியாக மாவை பிசைந்து, பூரி தேய்த்து சுட்டால், பூரி அப்பளம் போல மொறு மொறுப்பாக கிடைக்கும். ரொம்பவும் டிரையாக மாவை எடுத்து அடித்தால் மண்டை உடையும் அளவுக்கும் பிசையாதீங்க. ஒரு விரலை வைத்து பூரி மாவை அழுத்தம் கொடுக்கும் போது, நம்முடைய விரல் அதில் படிய வேண்டும். தவிர நம்முடைய விரல் மாவுக்கு உள்ளே சென்று விடக்கூடாது. அந்த பக்குவத்தை சரியாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பக்குவமாக பிசைந்த இந்த பூரி மாவை ஒரு டப்பாவில் போட்டு மூடி 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து எடுங்கள். பிறகு அந்த மாவைத் திரட்டி பூரி சுட்டால் எண்ணெய் அதிகமாக குடிக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பூரி சுடுவதற்கு கடாயில் எண்ணெய் வைப்போம் அல்லவா. அந்த எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயில் பூரியை சுட்டால் பூரி நிறைய எண்ணெய் குடிக்காது.

- Advertisement -

உங்களுக்கு சிவந்த பூரி தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமா. அப்போது பூரிக்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து பிசைந்தால் பூரி பொன்னிறமாக சிவந்து கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சில பேர் இந்த பூரி மாவில் பால் சேர்த்து பிசைவதை கூட வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு பூரி மாவு பிசைவதில் இத்தனை விஷயமா என்று யோசிக்காதீங்க. இதை எல்லாம் பின்பற்றினால் பெர்ஃபெக்ட்டான பூரி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். சூப்பரான பூரி தேவை என்றால் மேலே சொன்ன குறிப்புகளை எல்லாம் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நீங்களும் சூப்பரான பூரி சுட்டு எடுத்து கொடுத்து பாராட்டை வாங்குவீர்கள்.

- Advertisement -