தோனியிடம் இருந்து போட்டியை பினிஷிங் செய்ய கற்றுக்கொள் பண்டிற்கு அறிவுரை வழங்கினார் – ரவி சாஸ்திரி

dhoni

இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.இவருக்கு வயது தற்போது 21 நடக்கிறது இதனால் இவர் நீண்ட நாள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தோனி ஓய்வுக்கு பிறகு அவரது இடத்தினை நிரப்ப சரியான நபர் இவர் தான் என்று கிரிக்கெட் உலகம் கூறி வருகிறது. பண்ட் உடைய அதிரடி ஆட்டம் அனைவராலும் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல.

pant

கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக இவர் அறிமுகம் ஆனார். அறிமுகமான அந்த தொடரில் சாதனமும் அடித்தார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி சிட்னி டெஸ்டில் சதமடித்து ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். மேலும் அவர் அடித்த சதம் அணியின் வலுவான நிலையினை எட்ட உதவியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரவி சாஸ்திரி இதுகுறித்து பேசுகையில் : பண்ட் இளம் வீரர் என்பதால் அவர் நீண்ட கிரிக்கெட் பயணத்தை மேற்கொள்ள முடியும். அவரது திறமை அபரிவிதமானது என்பது உண்மையே.

ravi

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் இந்திய அணியின் ஆல் டைம் பெஸ்ட் பினிஷர் தோனியிடம் இருந்து போட்டிகளை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது அவசியம் என்று ரவி சாஸ்திரி பண்ட்டிற்கு அறிவுரை வழங்கியுள்ளார் . தோனி 15 ஆண்டுகளாக இந்திய அணியின் பினிஷராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகிறது – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்