2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகிறது – அதிகாரபூர்வ அறிவிப்பு

ipl
- Advertisement -

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும் IPL போட்டிகள் நடத்தப்படுகின்ற இந்த ஆண்டு IPL 12ஆம் ஆண்டை எட்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு அணியாக பிரிக்கப்படுவார்கள். பின்னர் இந்த அணிகளை வைத்து ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடும்.

ipl 2

பிறகு பிளே ஆப் சுற்றுகளில் விளையாடி இறுதி போட்டி நடைபெறும் . இந்தியாவில் நடைபெறும் IPL போட்டிகள் உலக அளவில் பிரசித்த பட்ட ஒன்றாகும். IPLபோட்டிகள் நடைபெறும் ஒன்றரை மாதம் கிரிக்கெட் பிரியர்களுக்கு விருந்து என்றே கூறவேண்டும். அதிரடிக்கு சுவாரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாமல் போட்டிகள் அமையும்.

- Advertisement -

சென்ற ஆண்டு தடைகாலம் முடிந்து திரும்பிய சென்னை அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த ஆண்டு IPL போட்டிகள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்தியாவில் நடைபெறுமா இல்லை வெளிநாட்டில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து IPL நிர்வாகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது .

ipl 1

அதன்படி இந்த ஆண்டு IPL போட்டிகள் இந்தியாவிலே நடைபெறும். மேலும் போட்டிகள் மார்ச் 23முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி அட்டவணைகளை IPL நிர்வாகக்குழு வரைமுறை படுத்தி வருவதால் இன்னும் சில தினங்களில் போட்டி அட்டவணை வெளியாகும் என்று IPL நிர்வாக குழு தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. ரசிகர்கள் IPL போட்டிக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம் – அணில் கும்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -