ஒரு கப் இட்லி மாவு இருந்தா போதும் அஞ்சு நிமிஷத்துல சட்டுனு இந்த மொறு மொறு இன்ஸ்டன்ட் போண்டா ரெடி பண்ணிடலாம். இனி வீட்டுக்கு திடீர் கெஸ்ட் வந்தா கொஞ்சம் கூட பதறாம அசால்ட்டா இதை செஞ்சு அசத்திருங்க.

left over bonda
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு எப்பொழுதுமே சமையல் செய்வதை விட இந்த ஸ்நாக்ஸ் வகைகள் செய்வது கொஞ்சம் யோசனையான விஷயம் தான். ஏனென்றால் வீட்டில் இருப்பதை வைத்து அதே நேரத்தில் குழந்தைகளுக்கும் பிடித்தது போலவும் உடலுக்கு கெடுதல் இல்லாத ஒரு உணவாகவும் செய்து கொடுக்க வேண்டும். இது ஒரு புறம் இருந்தாலும் வீட்டில் திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால் அந்த நேரத்தில் சமாளிக்க வீட்டில் பலகாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் சட்டு என்று கை கொடுக்கக் கூடிய ஒரு டிஷ் ஆக இதை செய்யலாம்.

இப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் எப்போதும் ஃப்ரிட்ஜில் இட்லி மாவு இருக்கத் தான் செய்யும். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் திடீரென யாராவது வந்து விட்டால் அந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்வதாக இருந்தாலும் சரி ஒரு கப் இட்லி மாவு இருந்தால் அதை வைத்து சூப்பரான இந்த போண்டா ரெசிபி செய்து விடலாம். அது எப்படி என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

செய்முறை

இந்த போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகம் புளிக்காத மாவாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் 1 டேபிள் ஸ்பூன் பச்சை அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்த பிறகு நீங்கள் ஏற்கனவே இட்லி மாவில் உப்பு சேர்த்து இருந்தால் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு பச்சை மிளகாய் அதையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் ஒரு கைப்பிடி கருவேப்பிலை கொத்துமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நறுக்கிய அனைத்தையும் நாம் ஏற்கனவே கலந்து வைத்த இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மாவு ஒரு ஐந்து நிமிடம் வரை அப்படியே ஊறட்டும். ரவை நன்றாக ஊறி மாவு கெட்டிப்பட்டு வரும் இந்த நேரத்தில் கொஞ்சமாக சமையல் சோடா சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக மாவை அடித்து கலந்து கொள்ளுங்கள். சமையல் சோடா சேர்த்தால் போண்டா நல்ல மொறு மொறுப்பாக வரும் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் சமையல் சோடா சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் அடுப்பை மீடியம் ஃப்ளேமுக்கு மாற்றிய பிறகு நாம் தயார் செய்து வைத்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு நன்றாக சிவந்த பிறகு எடுத்து விட வேண்டும். அவ்வளவு தான் இட்லி மாவை வைத்து சுவையான இன்ஸ்டன்ட் போண்டா தயார் செய்து விட்டோம்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் சட்னி செய்முறை விளக்கம் (Brinjal chutney recipe in Tamil)

இட்லி மாவு வீட்டில் இருந்தால் போதும் 10 நிமிடத்திற்குள்ளாவே மிகவும் அருமையான ஒரு சூப்பரான மொறு மொறு வென்று போண்டா தயார் செய்யலாம். இந்த போண்டா ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இது போல செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -