எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாத அளவிற்கு ருசியான கத்திரிக்காய் சட்னி குக்கரில் செய்வது இவ்வளவு சுலபமா? இது தெரிஞ்சா இனி சட்னி அரைப்பதற்கு பதிலாக இதையே செய்வோமே!

brinjal-chutney_tamil
- Advertisement -

இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றுக்கு சட்னியை விட சாம்பார் இருந்தால் இன்னும் கூடுதலாக நாலைந்து இட்லிகள் உள்ளே போகும். குக்கரில் 5 நிமிடத்தில் செய்து அசத்தக்கூடிய இந்த கத்திரிக்காய் சட்னி அல்லது சாம்பார் அபாரமான ருசி கொடுக்கக் கூடியதாக இருக்கும். 10 இட்லி எப்படி சாப்பிட்டோம் என்று தெரியாமலேயே சாப்பிடுவோம். அந்த அளவிற்கு சுவையான இந்த சுலபமான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, வரமிளகாய் – 3, பச்சை மிளகாய் – 4, கத்திரிக்காய் – எட்டு, உருளைக்கிழங்கு – 2, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், புளி – சிறு எலுமிச்சை அளவு, தாளிக்க: எண்ணெய் – இரண்டு ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கருவேப்பிலை- ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

கத்திரிக்காய் சட்னி செய்வதற்கு முதலில் பச்சை கத்திரிக்காய் தேவையான அளவிற்கு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு குக்கரில் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பொடிபொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி துண்டுகள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து ரெண்டு உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள்.

பின்னர் இவற்றுடன் தேவையான அளவிற்கு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட அளவின் படி சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அப்புறம் குழம்பாக மாறிவிடும். மத்து அல்லது ஸ்மேஷர் வைத்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் கொதிக்கும் பொழுது சிறு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை அரை கப் தண்ணீரில் நன்கு கரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விட்டு கொஞ்சம் பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கும் சட்னியில் கொட்டுங்கள். இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கிய மல்லி தழையை தூவிக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பீச் ஸ்டைல் மாங்கா மசாலா ரெசிபி இனி வீட்டிலேயும் சுலபமாக செய்யலாமே! இந்த மாங்காய் சீசனில் அசத்தலான மாங்காய் மசாலா எப்படி செய்வது?

அவ்வளவுதாங்க, ரொம்ப சுவையான டேஸ்டியான இந்த கத்திரிக்காய் சட்னி அல்லது சாம்பார் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். சுலபமாகவும் செய்யக்கூடியதாக இருப்பதால் சட்னிக்கு பதிலாக இப்படி ருசியாக செய்து அசத்தலாம். நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, வேலை சுலபமாக முடியும்.

- Advertisement -