மீதமான சாதம் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸ் தயார். இந்த ரெசிபி தெரிஞ்சி வச்சிக்கிட்டா இனிமேல் மீதமான சாதத்தை யாரும் வீணாக்க மாட்டீங்க.

pakoda
- Advertisement -

பொதுவாகவே எல்லோருக்கும் மீதமான சாதத்தில் எப்படி பக்கோடா செய்வது என்று தெரிந்திருக்கும். ஆனால் மீதமான சாதத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சத்து சேர்த்து அதில் சாஃப்ட்டான சூப்பரான பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்‌. மீதமான சாப்பாட்டில் நாம் சேர்க்கப் போகும் அந்த சத்து நிறைந்த பொருள் என்ன தெரியுமா. முட்டை, சில குழந்தைகள் முட்டையை அப்படியே சமைத்துக் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இப்படி பகோடாவாக செய்து கொடுங்கள்.

இந்த பக்கோடாவில் முட்டை சேர்த்து இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாது. மொறுமொறுப்பாக இதை ஸ்நாக்ஸ் போல சாப்பிட்டு விடுவார்கள். வாங்க மீதமான சாப்பாடு முட்டையையும் வைத்து எப்படி பக்கோடா செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செய்முறை

1 சின்ன கப் அளவு மீதமான வடித்த சாதம் எடுத்துக் கொண்டால், பின் சொல்லக்கூடிய அளவுகள் எல்லாம் சரியாக இருக்கும். ஒரு அகலமான பவுலில் முதலில் வடித்த சாதத்தை போட்டு, 2 முட்டையை ஊற்றி நன்றாக ஒரு ஸ்மேஷரில் வைத்து நசுக்கவும். பீட்டர் இருந்தால் அதில் அடிக்கலாம். அப்படி இல்லை என்றால், சாதத்தையும் முட்டையையும் மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

முட்டையையும் சாதத்தையும் அரைத்து இப்போது வைத்திருக்கிறோம். அதில் கடலை மாவு 1/2 கப், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிகப் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளை, போட்டு நன்றாக கலந்தால் ஒரு போண்டா மாவு உங்களுக்கு கிடைத்திருக்கும். (இதில் கூடுதல் காரம் தேவை என்றால் சில்லி ஃபிளக்ஸ் சேர்த்தாலும் சுவையாக தான் இருக்கும். இஞ்சி வாசம் பிடிப்பவர்கள் இஞ்சி துருவல் 1/2 ஸ்பூன் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம் ஜீரணத்துக்கு நல்லது.)

- Advertisement -

அவ்வளவுதாங்க. போண்டா விட தேவையான மாவு ரெடி. இதை குட்டி குட்டி போண்டாவாக சுட்டு எடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இந்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து கிள்ளி கிள்ளி எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான பக்கோடா தயார். மிதமான தீயில் இந்த பக்கோடா பொரித்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எளிய சமையல் குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக! இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா சமையலும் ருசிக்குமே!

ரொம்பவும் பெருசு பெருசா போண்டா விடாதீங்க. இதில் முட்டை சேர்த்திருப்பதால் சின்ன சின்ன போண்டாவாக விட்டாலே உப்பி வரும். சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். சைடிஸ் கூட தேவை இல்லை. ஈவினிங் குழந்தைகளுக்கு இதை ஸ்னாக்ஸ் ஆக கொடுத்து பாருங்க. ஆரோக்கியம் நிறைந்த உணவை அவர்கள் சாப்பிட்டது போலவும் நமக்கு மனசு நிறைவாக இருக்கும். பெரியவர்களுக்கு ஒரு கப் டீ இந்த பக்கோடா இருந்தால் சாயங்கால வேலை சூப்பராக நகர்ந்து செல்லும். உங்களுக்கு இந்த சிம்பிளான ஸ்னாக்ஸ் ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -