பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எளிய சமையல் குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக! இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா சமையலும் ருசிக்குமே!

taste-idli-chappathi
- Advertisement -

வீட்டில் சாதம் வடிப்பது முதல் சமையல் அறையை சுத்தமாக வைப்பது வரை பெண்கள் தான் பெரும்பாலும் முன்னிலை வகித்து செய்து வருகின்றனர். பெண்கள் சமையல் செய்யும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில எளிமையான குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அற்புதமான சமையல் குறிப்பு ரகசியங்களை நீங்களும் தெரிந்து கொள்ள பதிவை தொடருங்கள்.

குறிப்பு 1:
சமையலறையில் துர்நாற்றம் வீசாமல் இருக்க, ஆங்காங்கே கற்பூரத் துண்டுகளை போட்டு வையுங்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை கற்பூரத்தை மாற்றலாம். இல்லையென்றால் உங்களிடம் வாசனை மிகுந்த எசன்ஸ், வெண்ணிலா போன்ற எசன்ஸ் இருந்தால் அதை பஞ்சில் நனைத்து கிச்சனின் மூலையில் வையுங்கள் எப்பொழுதும் துர்நாற்றம் வீசாது.

- Advertisement -

குறிப்பு 2:
சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது முதலில் மாவு பிசையக்கூடிய பாத்திரத்தை சுற்றிலும் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தண்ணீரை ஊற்றி அதில் மாவை போட்டு பின்பு பிசையுங்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிசையும் பொழுது பாத்திரத்தில் மாவு ஒட்டாது. அதை கழுவி சுத்தம் செய்வதும் ஈசியாக இருக்கும்.

குறிப்பு 3:
இட்லி மாவை எடுத்து இட்லிக்கு ஊற்றுவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை இட்லி மாவில் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஐந்து நிமிடத்திற்கு பிறகு மாவை ஊற்றி இட்லி சுட்டு எடுத்து பாருங்கள், இட்லி பஞ்சு போல சுவையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
அவரக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேக வைக்கும் பொழுது சிறிதளவு தக்காளி சாறு அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

குறிப்பு 5:
சூடான எண்ணெயில் பலகாரங்கள் செய்யும் பொழுது சிறிது இஞ்சியை தட்டி சேர்த்து செய்தால் பலகாரங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும் எண்ணெயும் கசண்டு போகாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
பொரித்த அப்பளம் மீந்து போய்விட்டால் அதனுடன் சிறிதளவு பச்சை மிளகாய், புளி, கருவேப்பிலை, துருவிய தேங்காய், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்தால் அப்பள துவையல் சுவையாக தயார்!

குறிப்பு 7:
பூண்டு அல்லது வெங்காயம் உரிப்பதற்கு சோம்பேறித்தனமாக இருக்கும். சில சமயங்களில் அதிக அளவில் உரிக்க வேண்டிய அவசியம் இருந்தால், சுடு தண்ணீரில் போட்டு உடனே குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுங்கள், பிறகு உரித்தால் சுலபமாக உரிக்க வரும்.

குறிப்பு 8:
அடிக்கடி ஃப்ரூட் சாலட் அல்லது வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிட்டால் உடல் நலம் அதிகரிக்கும். இப்படி சாலட் செய்பவர்கள் எலுமிச்சம் கலந்த தண்ணீரில் நனைத்து எடுத்து செய்தால் நீண்ட நேரம் கறுத்து போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

குறிப்பு 9:
வடித்த சாதம் பொலபொலவென்று, வெள்ளை வெளேர் என வருவதற்கு இரண்டு சொட்டு எலுமிச்சை சாறை பிழிந்து சாதத்தை கொதிக்க விடுங்கள். பின்னர் வடித்துப் பார்த்தால் சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பொசு பொசுவென்று பஞ்சு போல ஆப்பம் மிருதுவாக வருவதற்கு எப்படி அரைக்கணும் தெரியுமா? இப்படி அரைச்சு ஆப்பம் சாப்பிட்டா எவ்ளோ சாப்பிட்டாலும் போதாதே!

குறிப்பு 10:
சாதம் வடிக்கும் பொழுது குழைந்து போவது போல தோன்றினால் உடனே கொஞ்சம் நல்லெண்ணையை அதில் ஊற்றி விடுங்கள், மேலும் குழையாமல் இருக்கும்.

- Advertisement -