மீதமான வறண்ட சப்பாத்தியில், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்ய முடியுமா? அடடே! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே.

பொதுவாகவே எல்லோரது வீட்டிலும் இந்த சப்பாத்தி செய்தால் அதில் இறுதியாக இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகள் மீதம் ஆகத்தான் செய்யும். நம்மில் நிறைய பேர் வீட்டில், அந்த சப்பாத்தியை ஆறிய பின்பு சாப்பிடவே மாட்டோம். அது சிலருக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஏனென்றால் அந்த சப்பாத்தி கொஞ்சம் வறண்ட தன்மையில் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் அதை வீணடிக்க தான் செய்வோம். இனி மீதமாகும் சப்பாத்திகளை வீணாக்காதீர்கள். ஆரோக்கியமான வித்தியாசமான இந்த பலகாரத்தை செய்து இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட வைத்து ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். வாங்க இந்த புதுவிதமான ரெசிபியான பார்த்திடலாம்.

chappathi1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் கொஞ்சம் சூடானதும் வேர்கடலை – 4 ஸ்பூன், பாதாம், முந்திரி பருப்பு – 10, பொட்டுக்கடலை – 1/4 கப், எள்ளு – 1/4 கப், நெய் – 1/4 ஸ்பூன், முதலில் இவைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக, மீதமான சப்பாத்தியை துண்டு துண்டாக, இந்த கலவையில் போட்டு நன்றாக சூடு படுத்தி, இறுதியாக 1 கப் அளவு – வெல்லத்தை சேர்த்து சூடு படுத்தி இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவேண்டும். ரொம்பவும் மைய அரைக்கும் பட்சத்தில் வெல்லம் தண்ணீர் விட ஆரம்பிக்கும். பக்குவமாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்தால் லட்டு போல வரும்.

verkadalai

குழந்தைகளுக்கு இதை விட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வேறு ஏதாவது உண்டா என்ன? கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு கூட இந்த ஸ்னாக்ஸ் கெட்டுப்போகாமல் இருக்கும். இனி சப்பாத்தி மிஞ்சிப்போனால் ஒரே ஒரு முறை இந்த ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

- Advertisement -

சரிங்க, அடுத்தபடியா நம்ம வீட்ல அடிக்கடி குப்பையில் போட கூடிய பொருள் மீதமான பிரெட் ஸ்லைஸ். ஒரு பாக்கெட் வாங்கினால் நிச்சயமாக அதில் மூன்றிலிருந்து நான்கு பிரெட்டை பூசனம் பிடித்து குப்பையில் தான் போடுவோம். அது கெட்டுப் போவதற்கு முன்பாகவே கடைசியாக இருக்கும் 4 பிரட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து கொள்ள வேண்டும்.

chappathi2

இந்த பிரட் துகள்களை ஒரு கடாயில் கொட்டி, 5 லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்தத் பிரட் தூள் மொறுமொறுவென மாறி இருக்கும். இப்போது இதை காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொண்டால் பிரெட் கிராம்ஸ் தயார். இது ஒரு மாதங்கள் வரை கெட்டுப் போகாது. உங்களுடைய வீட்டில் கட்லெட் செய்யும்போது இதை மேலே தூவி விட்டால் மொறுமொறுவென இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
வெண்டைக்காயை வைத்து இப்படிக்கூட ஒரு கிரேவி வைக்கலாமா? அதுவும் வெறும் 5 நிமிடத்தில். உங்களுக்காக சூப்பர் ரெசிபி!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.