மீந்து போன சாதம் இனி குப்பைக்கு போக வேண்டாம் சூடான, சுவையான சப்பாத்தி இப்படி கூட தயார் செய்யலாமே! மிருதுவான சாத சப்பாத்தி எப்படி செய்வது?

rice-chappathi
- Advertisement -

நம்முடைய வீட்டில் சாதம் மீந்து போனால் பல சமயங்களில் அது குப்பைக்கு தான் செல்லும் ஆனால் மீந்து போன சாதத்தை வைத்து சுவையான சூடான சப்பாத்தியை அருமையான முறையில் இப்படி கூட நாம் தயார் செய்து அசத்தலாம். இது மட்டும் தெரிஞ்சா இனி கொஞ்சம் சாதம் இருந்தாலும் சட்டுனு நீங்கள் சப்பாத்தி செய்து விடுவீர்கள். சுவையான மிருதுவான சாத சப்பாத்தி ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – ஒரு கப், மைதா மாவு – கால் கப், கோதுமை மாவு – அரை கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை 

ரைஸ் சப்பாத்தி செய்வதற்கு முதலில் உங்களிடம் இருக்கும் மீதமான சாதத்தில் ஒரு கப் சாதம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். வடித்த சாதம் ஒரு கப் எடுத்துக் கொண்டால் கால் கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

மைதா மாவுக்கு பதிலாக அரை கப் அளவிற்கு கோதுமை மாவும் சேர்க்கலாம். மைதா மாவு சேர்ப்பவர்கள் கால் கப் அளவிற்கு மட்டும் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்து வாருங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த மாவுடன் இப்பொழுது மீதம் இருக்கும் கால் கப் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக கொஞ்சம் எண்ணெய் தடவி நன்கு மாவை திரட்டி ரெண்டு நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். சாதம் சேர்த்திருப்பதால் அதிகம் ஊற வேண்டிய அவசியம் இல்லை சப்பாத்தி மிருதுவாக வரும்.

பிறகு ஒரு சப்பாத்தி கட்டையை எடுத்து அதில் கோதுமை மாவை தூவி இந்த மாவிலிருந்து சிறுசிறு உருண்டையாக எடுத்து உருட்டி எப்பொழுதும் சப்பாத்திக்கு தேய்ப்பது போல தேய்க்க வேண்டும். இந்த மாவில் அரிசி சாதம் சேர்த்து இருப்பதால் கைகளில் சில சமயங்களில் ஒட்டி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கைகளில் எண்ணெய் தடவி மாவில் கொஞ்சம் கோதுமையை தடவி பின்பு சப்பாத்தியை தட்டுங்கள்.

- Advertisement -

பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் எண்ணெயை தடவி சப்பாத்தியை போடுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு புறமும் சிவக்க பொன்னிறமாக வேக எடுக்க வேண்டும். எண்ணெக்கு பதிலாக நெய் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பால் இல்லாமல் சேமியா பாயாசம் செய்ய முடியுமா? இப்படி ஒருமுறை பாயாசம் வச்சி பண்ணுங்க உங்க வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க!

ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடிய இந்த அரிசி சாதம் சேர்த்த சப்பாத்தி எல்லோருக்கும் பிடிக்கும். இதில் சாதம் சேர்த்திருக்கிறோம் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சுவையான இந்த அரிசி சாதம் சப்பாத்தி செய்வதால் சாதமும் வீணாகாது. மிருதுவான, சூடான சப்பாத்தியும் நமக்கு கிடைக்கும். நீங்களும் இப்படி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -