மீதமான சாதத்தை வைத்து மிக மிக சுலபமான முறையில் சுவையான சப்பாத்தி செய்வது எப்படி? இந்தச் சப்பாத்தியில் சாதம் போட்டு தான் செய்திருக்கிறீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

chappathi
- Advertisement -

வடித்த சாதம் மிஞ்சி விட்டாலும் சரி அல்லது உங்களுடைய வீட்டில் கொஞ்சம் குழைவான சாதம் இருந்தாலும் சரி அந்த சாதத்தை வைத்து சுலபமான முறையில் ஒரு சப்பாத்தியை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த சப்பாத்தியை செய்து கொடுத்து பாருங்கள். இதில் சாதம் போட்டு இருப்பதாக அவர்களிடம் சொல்லாதீர்கள். நிச்சயமாக அவர்களால் கண்டுபிடிக்க முடியாது இந்த சப்பாத்தியை நீங்கள் எதில் செய்தீர்கள் என்பதை.

chappathi1

முதலில் 1 கப் அளவு மீதமான சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், மைதா – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு சாதத்தில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த இந்த மாவு கையில் பிசுபிசுப்பாக தான் ஒட்ட செய்யும்.

- Advertisement -

அரைத்த இந்த மாவை அகலமான ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும். உங்களுடைய கையில் கொஞ்சமாக எண்ணெய் தொட்டுக் கொள்ளுங்கள். இந்த மாவுடன் இன்னும் கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்து பிசைய தொடங்குங்கள். உங்களுக்கே பக்குவம் தெரியும். கையில் ஒட்டாமல் மாவு, சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்வரை எவ்வளவு தேவையோ அவ்வளவு கோதுமை மாவை சேர்த்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு கையில் எண்ணெய் தொட்டு இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எப்போதும்போல சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியை வட்ட வடிவில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

chappathi2

நாம் எப்போதும் சப்பாத்தி திரட்டுவது போல கிடையாது. இந்தச் சப்பாத்தியில் கொஞ்சம் லேசாக பிசுபிசுப்பு தன்மை இருக்கும். கோதுமை மாவை கொஞ்சம் அதிகமாகவே தூவி சப்பாத்தியை ரொம்பவும் தடிமனாக இல்லாமல், ரொம்பவும் மெல்லிசாகவும் இல்லாமல் தேய்த்து ஒவ்வொன்றாக சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த சப்பாத்தியை தோசைக்கல்லில் போடுவதற்கு முன்பு கல்லில் கொஞ்சமாக எண்ணெய் தடவிவிட்டு அதன் பின்பு சப்பாத்தியை போடவேண்டும். சப்பாத்தியின் மேல் பக்கம் எண்ணெய் தடவி, அதன் பின்பு சப்பாத்தியை திருப்பி போட்டு மற்றொரு பக்கமும் எண்ணெயை தடவி மிதமான தீயில் சிவக்க வைத்து எடுத்தால், சூப்பரான சப்பாத்தி தயார். உங்களுக்கு நெய் தேவை என்றாலும் நெய் ஊற்றி இந்த சப்பாத்தியை சுட்டுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்.

chappathi3

எப்பவும் சப்பாத்திக்கு சைட் வைப்பதுபோல குருமா, தால், சன்னா மசாலா, எதை வேண்டுமென்றாலும் இதற்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -