இப்படிக் கூட இடியாப்பம் செய்யலாமா? இவ்வளவு சத்து நிறைந்த இடியாப்பத்தை இதுவரைக்கும் நம்ம கொள்ளுப்பாட்டி கூட, செஞ்சி தந்திருக்க மாட்டாங்க.

banana-idiyappam
- Advertisement -

அவ்வளவு சத்து நிறைந்த இடியாப்பமா. அது என்னங்க ஸ்பெஷல் இடியாப்பம். வழக்கமாக நாம் செய்யக்கூடிய இடியாப்பத்தை விட இந்த ரெசிபி முழுக்க முழுக்க வித்தியாசமானது தான். ஆவியில் வேகவைத்த பண்டம் என்றால் அது உடலுக்கு ஆரோக்கியம் தரும். அந்த ஆரோக்கியம் தரும் உணவையே மேலும் ஆரோக்கியமாக மாற்றி செய்து தருவதில் தான் டேலண்ட் இருக்கிறது. அந்த வகையில் இன்னைக்கு நாம பார்க்கப் போற இடியாப்பம் நேந்திர வாழைப்பழம் சேர்த்த இடியாப்பம்.

ரொம்ப கஷ்டமா இருக்குமோ என்று ரெசிபியை படிக்காமல் விட்டுறாதீங்க. இது ரொம்ப ரொம்ப ஈஸி தாங்க. இதனுடைய சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் அரிசி மாவு, நேந்திர பழம் இருந்தால் சட்டுனு இந்த இடியாப்பத்தை 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம்.

- Advertisement -

செய்முறை

முதலில் 2 நேந்திரம் பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். நான்கு துண்டுகள் கிடைக்கும் அல்லவா. அதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் போல வேக வைத்து எடுக்க வேண்டும். வேக வைத்த நேந்திரம் பழத்தை மேலே இருக்கும் தோலை உரித்து விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு பச்சரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் நேந்திரம் பழ விழுது, சேர்த்து சிறிதளவு உப்பு, போட்டு உங்கள் கைகளை கொண்டு இந்த மாவை பிசைய வேண்டும். நேந்திரம் பழத்தில் இருக்கும் தண்ணீர் பெரும்பாலும் போதுமானதாக இருக்கும். தண்ணீர் போதவில்லை என்றால் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தெளித்து இந்த மாவை பக்குவமாக இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இடியாப்ப தட்டிலோ அல்லது இட்லி தட்டிலோ இந்த இடியாப்பத்தை, இடியாப்ப அச்சில் போட்டு பிழிய வேண்டும். மேலே தேங்காய் பூ தூவி அப்படியே இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் போல ஆவியில் வேக வைத்து எடுத்து மேலே நெய், நாட்டு சக்கரை தூவி கொடுத்தால் அருமையான ஆரோக்கியம் தரும் இடியாப்பம் தயாராகி இருக்கும். இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்குங்க. யோசிக்காம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நேந்திரம் பழம் இப்போது நம்முடைய ஊர்களிலும் எளிமையாக எல்லா கடைகளிலும் கிடைக்கின்றது.

இதையும் படிக்கலாமே: மாவடு ஊறுகாய் போடுவது இவ்வளவு ஈஸியா? ஐயர் வீட்டு, மாவடுவை, நம்முடைய வீட்டிலும் சுலபமாக செய்யலாம் வாங்க.

சுட சுட இந்த இடியாப்பத்தை சாப்பிட்டு விடுங்கள். தேவை என்றால் தேங்காய் பால் ஊற்றியும் இந்த இடியாப்பத்தை பரிமாறலாம். பாயா, ஆட்டுக்கால் குழம்பு என்று அசைவ பிரியர்கள், அசைவ சைடிஷுடனும் இந்த இடியாப்பத்தை சாப்பிட்டால் நல்ல ருசி தரும். உங்களுக்கு இந்த ஆரோக்கியம் தரும் ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம நிச்சயம் ட்ரை பண்ணி பாக்கணும்.

- Advertisement -