உங்கள் வீட்டை எந்த கெட்டதும் நெருங்காமல் இருக்க ‘பச்சைமிளகாயை’ முறையாக இப்படி கட்டுங்கள். அப்புறம் பாருங்கள் அதிசயத்தை!

lemon-and-chilli-thirusti
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் மற்றவர்களின் கண் பார்வை திருஷ்டியாக படாமல் இருக்க எலுமிச்சையும், பச்சைமிளகாயும் நிலை வாசலுக்கு மேலே நடுவில் கட்டி தொங்க விடுவார்கள். இதன் மூலம் வீட்டிற்குள் இருக்கும் தீய சக்திகளோ அல்லது வீட்டிற்கு வெளியே இருக்கும் துஷ்ட சக்திகளோ நம்மை நெருங்காமல் பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. எலுமிச்சை தேவ கனியாக பார்க்கப்படுகிறது.

thirusti

மற்றவர்களின் பொறாமை பார்வை, ஏக்கப்பார்வை, துஷ்ட பார்வை என்று எதுவாக இருந்தாலும் அதனை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கும், பச்சைமிளகாய்க்கும் உண்டு. இதை வாராவாரம் நாம் முறையாக நம் குடும்பத்தினரின் நலனுக்காக செய்து வந்தாலே போதும். வேறு எந்த ஒரு பரிகாரமும் சாதாரணமாக நமக்கு தேவைப்படுவதில்லை. இதுவே மிகப் பெரிய பாதுகாப்பு வளையமாக நம் வீட்டை காக்கும். அப்படிப்பட்ட இந்த பரிகாரத்தை நாம் சரியாகத்தான் செய்கிறோமா? என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். எப்படி முறையாக இவற்றை சேர்த்து கட்ட வேண்டும் என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்களாக இருப்பவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்து சென்று பாடம் ஒன்று உண்டு. நாம் வெளியே எங்காவது செல்லும் போதோ அல்லது காத்து கருப்பு அண்டாமல் இருக்கவும் நம்மிடம் சிறிய இரும்பு துண்டு ஒன்றை வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துவது உண்டு. இதற்கு பதிலாக கரித்துண்டு அல்லது வேப்பிலையும் கொடுத்து வைப்பார்கள். இவையெல்லாம் நம்மை மீறிய சக்திகளிடமிருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்த பொருட்களாக அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை நம்முடன் இருப்பவை.

iron-nail-aani

சிலர் மாமிச உணவை கொண்டு வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும். சூரியன் மறைந்த பிறகு இது போன்று கறி சமைத்த உணவை கொண்டு செல்லும் பொழுது அவற்றுடன் சிறிய இரும்பு துண்டையும், வேப்பிலையையும் வைத்து அனுப்புவார்கள். பொழுது சாய்ந்த பிறகு துஷ்ட சக்திகள் வெளியில் நடமாடுவதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நம்மிடம் மாமிச உணவு இருந்தால் அது நம்மைப் பின்தொடர்ந்து வரும் என்பது நம்பிக்கை. அவைகளிடமிருந்து பாதுகாக்க இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி வந்தார்கள்.

- Advertisement -

இதுபோன்ற விஷயங்களில் நாம் நம்பிக்கை கொள்கிறோமோ? இல்லையோ! ஆனால் செய்து விடுவதுண்டு. காரணம் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் உள்ளன என்பது நம் மனதிற்கு புரிகிறது. ஆனால் அறிவோ அதை ஏற்க மறுக்கிறது. வீட்டு வாசலில் கட்டப்படும் இந்த திருஷ்டி எலுமிச்சையை வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமையில் காலை வேளையில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சிகப்பு அல்லது கருப்பு கயிற்றை எடுத்துக் கொள்ளுங்கள். கயிறு ஊசி நுழையும் அளவிற்கு மெல்லியதாக பார்த்துக் கொள்ளுங்கள். ஊசியை நுழைத்து நுனியை நன்றாக கட்டிக் கொள்ளுங்கள். இப்போது நுனியில் இரும்பு ஆணியை நன்றாக முடிச்சுப்போட்டு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு கறித் துண்டு ஒன்றை இதேபோல் இருக்கமாக கட்டிக் கொள்ளுங்கள்.

thirusti-lemon

பின்னர் ஊசி வாயிலாக புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து நுழைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக பச்சை மிளகாய்களை ஒற்றைப்படையில் 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் ஒரு முனை அந்தப்பக்கமும் ஒரு முனை இந்த பக்கமும் பார்க்கும்படி ஒன்று மாற்றி ஒன்று ஊசியில் நுழைத்து கொள்ளுங்கள். ஊசியுடன் சேர்த்து அப்படியே வாசலில் கட்டி விடுங்கள். வாரம் தோறும் நீங்கள் மாற்றும் பொழுது உங்களுக்கு வசதியாக இருக்கும். அதிலிருக்கும் காய்ந்து போன எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்களை மட்டும் நீக்கிவிட்டு புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை எந்த கெட்டதும் நெருங்கவே நெருங்காது. குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இருக்கக்கூடாது என்றால், பயம் இருக்கக்கூடாது. மன பயம் போக்க, வலிமையான, எளிமையான பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to make lemon and chilli hanging. Kan thirusti pariharam in Tamil. Lemon and green chilli hanging. Lemon and chilli on door. Lemon and chilli to ward off evil.

- Advertisement -