இது தெரிந்தால் இனி எலுமிச்சை தோலை ஒண்ணு கூட தூக்கி போடவே மாட்டீங்க! பத்திரமா பிரிட்ஜில் ஸ்டோர் செஞ்சு வச்சிப்பிங்க!

lemon-peel

எலுமிச்சை பழத்தோல் தேவையில்லை என்று நீங்கள் தூக்கி போடுபவராக இருந்தால்! உங்களுக்கு தான் கண்டிப்பாக இந்த பதிவு உபயோகமாக இருக்கும். நாம் அடிக்கடி பயன்படுத்தும் எலுமிச்சை பழத்தை சாறு எடுத்ததும் வீணாக தூக்கி எறியும் அதன் தோல்களை தனியே ஒரு பாலித்தீன் பையில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி ஸ்டோர் செய்து வைத்த இந்த எலுமிச்சை தோல்களை வைத்து அற்புதமான வீட்டு உபயோக டிப்ஸ்களை தான் இனி இதில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

lemon

எலுமிச்சை பழச்சாற்றை அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்காமல், ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைத்து, கியூப்களாக செய்து வைத்தால் தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்சைப் பழத் தோல்களை ஒவ்வொரு வீட்டு உபயோகத்திற்கும் எடுத்து சட்டென பயன்படுத்திக் கொள்ள முடியும். நம் தோசைக்கல்லில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனை தோசை மொறு மொறுவென்று வராமல் ஒட்டிக் கொள்வது தான். இதற்கு நீங்கள் இரண்டு வகையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒன்று தோசைக்கல்லில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை அகற்ற எலுமிச்சை பழ தோலை வைத்து உப்பில் தொட்டுக் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் வெறும் தண்ணீரில் கழுவி விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். அதன் பின் சிறிதளவு தண்ணீரில் சமையல் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை பயன்படுத்தி தோசை கல்லை ஒவ்வொரு முறை தேய்த்து தோசை ஊற்றினால் தோசை கொஞ்சம் கூட ஒட்டாமல் மொறுமொறுவென்று கண்டிப்பாக வரும்.

dosai-kal3

பித்தளை பாத்திரங்களை தேய்க்க சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சபீனா சேர்த்து தண்ணீர் பயன்படுத்தாமல் எலுமிச்சைப் பழ தோலை வைத்து நன்கு தேய்த்து விட்டால் போதும்! புத்தம் புதியதாக மின்னும். பிரிட்ஜ் வாசனையாக இருக்கவும், அதில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கவும் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை மூடியை வைத்து அதில் சிறிதளவு ஆப்ப சோடா போட்டு விட்டால் போதும்! ஒவ்வொருமுறை பிரிட்ஜை திறக்கும் பொழுதும் பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

ஐந்தாறு எலுமிச்சை மூடிகளை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடம் இந்த தண்ணீரை கொதிக்கவிட்டு எடுத்தால் மூடியில் இருக்கும் சாறு மொத்தமும் தண்ணீரில் இறங்கி இருக்கும். இதனை சூடாக இருக்கும் பொழுது சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு, அந்த தண்ணீரில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்க்ரப்பர், பல் தேய்க்க பயன்படுத்தும் டூத் ப்ரஸ் போன்றவற்றின் கிருமிகளை போக்குவதற்கு ஊற வைத்து எடுக்கலாம். அல்லது இந்த தண்ணீரை நன்கு ஆற வைத்து அதனுடன் சிறிதளவு டிடர்ஜென்ட் லிக்விட் அல்லது பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட-ஐ சேர்த்துக் கொள்ள வேண்டும்.

tiles-cleaning

பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சாதாரண கல் உப்பும், அரை டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த கலவையை நன்கு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் வீட்டை சுத்தம் செய்வது என்பது எளிதான காரியமாக மாறிவிடும். இந்த ஸ்பிரே பாட்டிலில் இருக்கும் லிக்விட் கேஸ் அடுப்பின் மேல் சிறிதளவு தெளித்து ஸ்கிரப்பர் வைத்து தேய்த்தால் விடாப்பிடியான கறைகளும் நீங்கிவிடும். அது போல் டைல்ஸ்களில் இருக்கும் அழுக்கை நீக்கவும் இந்த கலவை சிறந்த பலனை கொடுக்கும். ஜன்னல் கதவுகள் துடைப்பதற்கு கூட இந்த லிக்விட்-ஐ பயன்படுத்தினால் பளபளவென்று வீடே மின்னும்.

இதையும் படிக்கலாமே
இனி இந்த செடியை எங்கு பார்த்தாலும், உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வந்துடுங்க! அப்படி என்னதா இந்த செடிக்குள் ரகசியம் அடங்கி இருக்குதுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.