இனி இந்த செடியை எங்கு பார்த்தாலும், உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வந்துடுங்க! அப்படி என்னதா இந்த செடிக்குள் ரகசியம் அடங்கி இருக்குதுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

table-rose

டேபிள் ரோஸ் என்று சொல்லப்படும் இந்தச்செடி தங்கத்துக்கு இணையானது. அப்படி என்றால்! தங்கம் எப்படி பளபளன்னு ஜொலிக்குதோ, அதே போல நாமும் பல பலனு மின்னுவதற்கு இந்த செடி நமக்கு உறுதுணையாக இருக்கும். இந்த செடியை வைத்து என்னென்ன பயனை நம்மால் அடையமுடியும் என்பதை பற்றிய அரிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோரது வீட்டு வாசலிலும் சுலபமாக வளரக்கூடிய டேபிள் ரோஸ் செடியை, அவ்வளவு உதாசீனமாக, சாதாரணமாக நினைக்காதீர்கள். இதில் அடங்கி இருக்கும் விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்! என்னென்ன விஷயங்கள் இப்பவே பார்த்திடலாம் வாங்க.

table-rose1

முதலாவதாக நம்முடைய சருமம் தகதகவென தங்கம் போல மாற வேண்டும் என்றால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கருந்திட்டுக்கள் இவை அனைத்தும் மறைய வேண்டுமென்றால் கொஞ்சமாக பிங்க் நிறத்தில் இருக்கும் டேபிள் ரோஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக அரைத்து அதில் கொஞ்சம் தேன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரால் கழுவி விடுங்கள். வாரம் 3 முறை இதைச் செய்து வந்தால் நீங்கள் தங்கம் போல ஜொலிக்கலாம்.

உங்களுடைய முடி ஸ்டைட்னிங் பண்ணது போல நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? இந்த டேபிள் ரோஸ் செடியில் இருக்கக்கூடிய தண்டு, இலைகளை எடுத்து தண்ணீரில் அலசி விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கலந்து உங்களது தலையில் மேல் பக்கத்திலிருந்து கீழ் பக்கம் வரை நீளவாக்கில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் ஊற விட்டு, அதன் பின்பு ஷாம்பு போட்டோ, சீயக்காய் போட்டு உங்களது தலையை அலசிக் கொள்ளலாம்.

face

வாரத்திற்கு ஒரு நாள் இப்படி செய்தால் கூட உங்களது முடியில் நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும். முயற்சி செய்து பாருங்கள். அடுத்தபடியாக நம்முடைய உயிரைக் காக்கக் கூடிய சக்தியும் இந்த டேபிள் ரோஸ் செடிக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

- Advertisement -

எதிர்பாராதவிதமாக உங்களை விஷ பூச்சிகளான பாம்பு, தேள், விஷ வண்டு இவைகள் கடித்துவிட்டால், உடனேயே இந்த இலை தண்டு சேர்த்து சாறு எடுத்து, கடிபட்ட இடத்தில் லேசாக தடவி விட்டு, அதன் பின்பு மருத்துவமனைக்கு செல்லுங்கள். அந்த விஷம் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல கூடிய இடைப்பட்ட நேரத்தில் உங்களுடைய உடம்பில் ஏறாமல் இருக்க இந்த டேபிள் ரோஸ் தண்டு இலை சாறு உதவியாக இருக்கும்.

hair

முயற்சி செய்து பாருங்கள் மூன்று முத்தான நல்ல விஷயங்களை கொடுக்கும் இந்த டேபிள் ரோஜாவை எங்கே பார்த்தாலும் ஒரு கிளையை லேசாக உடைத்து சாதாரணமாக நட்டு வைத்தாலே போதும். தானாகவே வளர்ந்து கொள்ளும் தன்மை உடையது இது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை கொண்டு பழைய வெள்ளி கொலுசு மற்றும் நகைகளை கை கூட வைக்காமல் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ! அதே போல மாற்றி விடலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.