குழப்பமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண 1 எலுமிச்சை பழம் போதும்.

sad-lemon

பொதுவாகவே குழப்பமான பிரச்சனைகள் என்றாலும், தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்றாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் பாதங்களை போய் சரணடைவது தான் இயல்பு. சில பேருக்கு வாழ்வில் ஏற்படும் குழப்பமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதனாலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட மன குழப்பத்தினால் இரவில் தூக்கம் சரியாக வராது. இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்றால், பகலில் செய்யும் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. ஆர்வம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் வெற்றியை தொடாது. இப்படி இருக்க, இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே கல் உப்புக்கும், எலுமிச்சை பழத்திற்க்கும் கெட்ட சக்தியை ஈர்த்துக் கொள்ளும் சக்தி அதிகமாக உள்ளது என்பதை நம்மில் பலர் அறிவோம். எலுமிச்சை பழம் என்றால் குறிப்பாக அம்மனுக்கு மிகவும் உகந்தது. முடிந்தவரை உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இருந்தால், அது எந்த அம்மனாக இருந்தாலும் சரி. அந்த குலதெய்வத்தின் மடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் குழப்பங்கள் அனைத்தும் தீர வேண்டும். நிம்மதியான தூக்கம் வேண்டும். மன அமைதி வேண்டும் என்றவாறு வேண்டிக்கொண்டு, அந்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சனை செய்து பெண்களாக இருந்தால் உங்கள் முந்தானையில் அந்த பழத்தை வாங்கவேண்டும். ஆண்களாக இருந்தால் மேலே போடும் அங்கவஸ்திரம் துணியில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று இப்படி செய்து வரலாம். வாங்கிய எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை செய்தால் நல்ல பலன் உண்டு. அன்று சுத்தபத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை தரையில் படும்படி வைக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கைநழுவி அந்த எலுமிச்சை பழத்தை தரையில் விட்டுவிடக்கூடாது.

salt1

செவ்வாய்க்கிழமை இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, நீங்கள் தூங்கும் அந்த அறையில் நான்கு திசைகளிலும் நான்கு வெள்ளை காகிதங்களை வைத்து, அந்த காகிதத்தின் மேல் ஒரு கைப்பிடி அளவு உப்பை வைத்து, அந்த உப்பின் மேல் பக்கத்தில், அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை நான்காக வெட்டி, குங்குமம் தடவி, நான்கு திசைகளிலும் நீங்கள் வைத்திருக்கும் பேப்பர் கல் உப்பின் மேல் இந்த பழத்தை, வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டி, கால் படாத இடத்தில் தூரமாக போட்டுவிட வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான். இதை நம்பிக்கையாக செய்யும் பட்சத்தில் மிக மிக நல்ல பலன் உண்டு. உங்களுக்கு அந்த தினம், அதாவது பரிகாரத்தை செய்யும் அந்த இரவு கெட்ட கனவுகள் வரலாம். அல்லது வித்தியாசமான உணர்வினை நீங்கள் அடையலாம்.

sleepless

எப்படியாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த கஷ்டம் உங்களை விட்டு நீங்கி விட்டது என்பதைக் குறிப்பதாக தான் அர்தம். இந்த பரிகாரத்தை செய்த மறுதினமே எந்தவித மன கஷ்டமும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவும். உடனடியாக பலன் தரக்கூடிய பரிகாரம் இது. பிரச்சினைகளுக்கான தீர்வினை எடுப்பதற்கான மன தைரியமும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது, என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thirusti in Tamil. Thirusti pariharam in Tamil. Kan thirusti pariharam Tamil. Kan thirusti remedies Tamil.