ஒரு முறை இந்த எலுமிச்ச பழத் துவையல் அரைச்சு சாப்பிட்டு பாருங்க, சாதம் கூட வேண்டாம் வெறும் துவையல் போதும் சொல்லுவீங்க. இப்படி ஒரு துவையலை நீங்க கண்டிப்பா சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க

- Advertisement -

இதுவரைக்கும் நிறைய துவையல் ரெசிபி உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் எலுமிச்சை பழ சாறை வைத்தும் துவையல் அரைக்கலாம் என்பது கொஞ்சம் புது தகவலாக தான் இருக்கும். எலுமிச்சை பழத்தை வைத்து செய்யும் இந்த துவையல் நல்ல காரசாரமாக புளிப்பு சுவையும் சேர்த்து மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க இந்த துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த துவையல் செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இந்த துவையல் செய்ய நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இது இரண்டில் ஏதாவது ஒன்று பயன்படுத்திக் செய்தால் சுவை அருமையாக இருக்கும். இப்போது எண்ணெய் காய்ந்தவுடன் அதில் 1/4 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு இத்துடன் 10 காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நல்ல பொன்னிறம் வரும் வரை அடுப்பை லோ பிளேமில் வைத்துக் வறுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த துவையல் அரைக்க 3 எலுமிச்சை பழத்தை நல்ல பெரிதாக பழுத்த பழமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை சாறு பிழிந்து கொட்டை திப்பிய எதுவும் இல்லாமல் வடிகட்டி ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்குள்ளாக பருப்புகள் நன்றாக வறுபட்டு இருக்கும். இதில் கடலைப்பருப்பு சேர்க்காமல் வெறும் உளுத்தம் பருப்பை மட்டும் சேர்த்து கூட அரைக்கலாம் அது உங்கள் விருப்பம். இப்பொழுது வறுபட்ட இந்த பருப்பு காய்ந்த, மிளகாய் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து 1/4 டீஸ்பூன் உப்பையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த மிக்ஸி ஜாரிலேயே எடுத்து வைத்த எலுமிச்சை பழ சாறையும் சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் மிகவும் பேஸ்ட்டாக அரைக்கக்கூடாது, அதே நேரத்தில் அரைக்கும் போது கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஒருவேளை எலுமிச்சை பழச்சாறு போதவில்லை என்றால் இன்னொரு பழத்தை பிடித்து சாறு எடுத்துக் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த இந்த துவையலை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள் இதற்கு ஒரு தாளிப்பை தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுப்பைப் பற்றி வைத்து தாளிப்பு கரண்டி வைத்து 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்த உடன் 1/2 டீஸ்பூன் உளுந்து, 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு இவற்றை சேர்த்து இவையும் பொறிந்த பிறகு 5 பூண்டு பல்லை நசுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் 1 கொத்து கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பொரிந்த உடன் கடைசியாக 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இதன் பிறகு இந்த தாளிப்பை துவையலில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள் சுவையான எலுமிச்சை பழ துவையல் தயார்.

இதையும் படிக்கலாமே: காரசாரமான காரப் பொடியும், காரப்பொடி தோசையையும் இப்படி செய்தால், ஆந்திராவுக்கே போய் காரப்பொடி தோசை சாப்பிட்டது போல இருக்கும்.

இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்திற்குமே சட்னியை போல வைத்து சாப்பிடலாம், அதுமட்டுமல்லாமல் சுட சுட சாதம் வைத்து இந்த துவையலை சேர்த்து சாப்பிடும் போது மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -