- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்காரசாரமான காரப் பொடியும், காரப்பொடி தோசையையும் இப்படி செய்தால், ஆந்திராவுக்கே போய் காரப்பொடி தோசை சாப்பிட்டது...

காரசாரமான காரப் பொடியும், காரப்பொடி தோசையையும் இப்படி செய்தால், ஆந்திராவுக்கே போய் காரப்பொடி தோசை சாப்பிட்டது போல இருக்கும்.

- Advertisement -

கரசாரம் என்றாலே அதற்கு பெயர் போன ஊர் ஆந்திரா. காக்கிநாடா ஸ்டைலில் ஒரு காரப்பொடி மிக மிக எளிமையாக எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த காரப்பொடியை கல்தோசை மேலே, ஊதப்பம் மேலே தூவி சாப்பிட்டால் அத்தனை ருசியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த பொடியை வைத்து, பொடி இட்லி செய்தால் வேற லெவல் டேஸ்ட். சுட சுட சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சமாக நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சொல்ல வார்த்தையே இருக்காது. அப்போ இந்த பொடியை அரைப்பது ரொம்ப கஷ்டமா. இல்லை நம்ம ஊரு இட்லி பொடி அரைப்பது போலவே தான். ஆனால், இதில் ஸ்பெஷல் ஆக ஒரு பொருளை சேர்த்து அரைக்க போகின்றோம். வாங்க அது என்ன பொருள் எப்படி அரைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 கப், உளுந்தம் பருப்பு – 1 கப், வரமல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வரமிளகாய் – 10, கருவேப்பிலை – 1 கொத்து, எள்ளு – 2 ஸ்பூன், பூண்டு – பல் 6, தேங்காய் துருவல் – 2 கப்.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு  போட்டு வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு போட்டு வறுத்து அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். (இந்த இரண்டு பருப்பு வகைகளும் பிரவுன் நிறத்திற்கு வரும் வரை வறுக்க வேண்டும் கருக விடாதீங்க)

அடுத்து அதே கடாயில் வர மல்லி, மிளகு, சீரகம் இந்த 3 பொருட்களையும் போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக எண்ணெய் சேர்க்க வேண்டாம். அந்த கடாயில் இருக்கும் எண்ணெயிலேயே பொடிக்கு தேவையான கல் உப்பு, வரமிளகாய் பத்திலிருந்து பதினைந்து, காரத்திற்கு ஏற்ப, கருவேப்பிலை 1 கைப்பிடி போட்டு, நன்றாக வறுத்து, இதையும் தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். அடுத்து எள்ளு, பூண்டு பல் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த பொருட்கள் எல்லாம் ஒன்றாக அப்படியே ஆறடும். இறுதியாக நாம் வருக்க போகும் அந்த ஸ்பெஷல் பொருள் என்ன தெரியுமா. தேங்காய் துருவல். 2 மூடியிலிருந்து 3 மூடி வரை தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். தாராளமாக கொஞ்சம் நிறையவே இதற்கு தேங்காயை பயன்படுத்தலாம். அடுப்பில் கடாயை சூடு செய்து அதில் துருவிய தேங்காய் போட்டு, பிரவுன் கலர் வரும் அளவுக்கு வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை சரியாக வறுக்க வில்லை என்றால் போடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும். (சில பேர் இதற்கு கொப்பரை தேங்காய் கூட பயன்படுத்துவார்கள்)

வறுத்த இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். சாதத்திற்கும் இதை நாம் சேர்த்து சாப்பிட போகிறோம் என்பதால், ரொம்பவும் கொரகொரப்பாக அரைக்காதிங்க. முடிந்த வரை நைஸ் ஆக இந்த பொடியை அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: இப்படி செய்ஞ்சீங்கனா பாலே சேர்க்காமல் பத்தே நிமிஷத்துல இந்த பாயசத்தை செய்து முடிச்சிடலாம். இனிமே வீட்ல எந்த விசேஷம் ஆனாலும் இந்த பாயாசத்தை தான். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.

பிறகு சட்னி சாம்பார் போர் அடிக்கும்போது எல்லாம் இந்த பொடி நமக்கு கை கொடுக்கும். முட்டை தோசை செய்தால் கூட அதன் மேலே இந்த பொடியை தூவி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். தேங்காய் சேர்த்து இருப்பதால் ஒரு மாதத்திற்கு மேல் இந்த பொடியை வெளியில் வைக்க வேண்டாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்