A என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்குகிறதா? அப்பொழுது உங்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

lettar-a
- Advertisement -

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்னவாக இருக்கிறதோ அந்த எழுத்தினை பொறுத்தே உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும். தமிழில் அ, ஆ என்ற எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்தாக இருந்தால் அவை ஆங்கிலத்தில் A என்ற எழுத்தில் தான் தொடங்கும். அப்படி A என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்களுக்கு என்னவெல்லாம் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் என்பதனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இந்த பதிவினை பின்தொடரலாம் வாருங்கள்.

A என்ற எழுத்து பார்ப்பதற்கு கோபுரம் மற்றும் பிரமிடு போன்றும் இருக்கும். இந்த எழுத்தினை பெயரின் முதலில் கொண்டவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்க்கையில் அவர்களுக்கென்று ஒரு குறிக்கோள் வைத்துக்கொண்டு அதனை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். தனக்கென்று ஒரு விதி முறையை வகுத்துக் கொண்டு அந்த வழியில்தான் செல்வார்கள் அவர்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் வரை வேறு எந்த செயலிலும் கவனத்தை சிதற விடமாட்டார்கள்.

- Advertisement -

இவர்களில் பெரும்பாலானோர் மற்றவர்களின் ஆலோசனையையும், விமர்சனத்தையும் கேட்கமாட்டார்கள். ஒரு விஷயத்தை தானாகவே உணரும் போது மட்டும் தான் அதனை மாற்றிக் கொள்வார்கள். அல்லது பிறரது ஆலோசனையை கேட்டு நடப்பார்கள்.

அது மட்டுமல்லாமல் தங்களின் திறமைகளை எப்பொழுதும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றும், எல்லா இடத்திலும் தானே முதலிடத்தை வகிக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பார்கள்.

- Advertisement -

ஆண்கள்:
A என்ற எழுத்தில் பெயர் கொண்டுள்ள ஆண்கள் மிகவும் ஆளுமை உள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை ஆள்பவர்களாகவும், அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். உதாரணமாக அலெக்சாண்டர், ஆபிரகாம் லிங்கன், அசோகர், அடால்ஃப் ஹிட்லர் போன்றவர்களைச் சொல்லலாம்.

எந்த ஒரு தொழில் அல்லது வேலை செய்பவர்களாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடுடன், நேர்மையாக, அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல் படுவார்கள். A என்ற எழுத்து முதலாவதாக இருக்கிறதோ அதேபோல் இவர்களும் எப்போதும் முதல் இடத்தில் இருப்பார்கள்.

- Advertisement -

பெண்கள்:
A என்ற எழுத்தை தொடக்கமாக வைத்துள்ள பெயர் கொண்ட பெண்கள் வாழ்வில் இன்பமும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளும் நிலைத்திருக்கும். வாழ்வில் அவர்களுக்கான இலக்கை அடைய கூடியவர்களாக இருப்பார்கள்.

சமூகத்தில் நல்ல மதிப்புடன் இருக்கும் இவர்கள் அவர்களுக்காக நிறைய நண்பர்களை கொண்டிருந்தாலும் சிலரிடம் மட்டுமே நெருக்கமாக பழகுவார்கள். முக்கியமாக இவர்களிடம் ஒத்துப் போகும்படி இருப்பவர்களிடமே அதிகம் பழகுவார்கள். இவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்காவிட்டாலும் இவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் இவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மையாகவே அமையவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து, நிதானித்து செயல்படும் இவர்கள் தெளிவான பார்வையுடனே எல்லாவற்றையும் அணுகுவார்கள்.

அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் பெரிதளவு அக்கறை காட்ட மாட்டார்கள். ஓரளவிற்கு மட்டுமே தங்கள் உடலை பாதுகாப்பார்கள். சமூகத்தில் எப்போதும் தங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். குடும்பத்தைப் பொருத்தவரையில் மிகுந்த பொறுப்புணர்வுடன், அனைவரையும் அக்கறையுடன் பார்த்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மொத்தத்தில் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரைக் கொண்டவர்கள் நல்ல சிந்தனையும், அதிர்ஷ்டமும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -