இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை!

ettukudi-murugan-kovil-2
- Advertisement -

நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது ஆண்டவர் – பெயர் குறிப்பு இல்லை) சிற்பியை அழைத்து முருகன் சிலை வடிக்க ஆணையிட்டார்.

lord murugan

சிற்பியும் ஆனந்தமாய் பக்தியுடன் முருகன் சிலையை வடிக்கலானார். சிலநாட்கள் சென்றன, அரசன் நகர்வலம் செல்லும் சமயத்தில் சிற்பியின் முருக சிலைக்கு உயிர் ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயித்தார்.

- Advertisement -

சோழர்கள் ஆட்சி அதுவும் தன் ஆட்சியில் உருவாக்கப் பட்ட இந்த சிலை போல் வேறெங்கும் இருக்கக் கூடாது என எண்ணிய அரசர், சிற்பியின் கட்டை விரலை வெட்டிவிட்டார்.

சோழமன்னரால்  சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, அந்த ஊரைவிட்டு வேறுஒரு கிராமத்துக்கு சென்று விட்டார்.

- Advertisement -

village

“ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார். அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார்.

அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.

- Advertisement -

Murugan statue

இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று,  “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார்.

இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். முருகனே நேரில் நிர்ப்பது போன்று அழகு சிலையைக் கண்டார். முருகனுக்கு கோவில் கட்டும் ஆவல் அவருள் தோன்றியது.

இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது.

Murugan kovil

ஒருசமயம்,சிற்பி முருகனுக்கான மயில் சிலையை வடிக்கும் போது மயில் பறக்க முயன்றதாம்.

இதை கண்ட சிற்பி எங்கே முருகன் மயிலுடன் பறந்து விடுவாரோ என எண்ணி, மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தை பெயர்த்தும் விட்டாராம்.

ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

ettukudi murugan

பரிகாரம் :
இந்த எட்டுக்குடி முருகப் பெருமானை தரிசித்து அவருக்கு வாசனை மலர்களை தருபவர் வாழ்வில் வறுமை நீங்கும்.
சந்தனம் தந்தால் உடல் உபாதைகள் நீங்கும்.
விபூதி காணிக்கை விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும்.
முருகனுக்கு வஸ்திரம் வழங்கினால், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
முருகனுக்கு அபிஷேகம் செய்தால் துன்பம் இல்லா வாழ்வு அமையும்

எட்டுக்குடி முருகனை வணங்கி இன்பமான வாழ்க்கையை எட்டிபிடிப்போம்.

- Advertisement -