முருகனுக்கு இரு மனைவிகள் இருப்பது உண்மையா ? இதன் ரகசியம் என்ன

Lord Murugan

உலகில் தோன்றிய இனங்களுள் மிக பழங்காலத்திலேயே நாகரீகம் அடைந்த இனம் “தமிழ் இனம்” என்பது உண்மை. இந்த தமிழ் இனத்தில் தோன்றிய பல சித்தர்களும், ஞானிகளும் மனிதர்கள் மனிதர்களாக வாழ பல நன்னெறிகளை நமக்கு போதித்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது நமது மதத்தின் கடவுளர்கள் பலருக்கும் இரு மனைவியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் தமிழர்களின் ஆதி கடவுளான முருகனுக்கும் இரு மனைவிகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த விடயத்திற்கான உண்மை காரணத்தை நாம் அறிந்து கொள்வோம்.

Sivanmalai Murugan

“ஒருவனுக்கு ஒருத்தி” என்கிற உயரிய கற்பு நெறியை ஆணுக்கும், பெண்ணுக்கும் போதித்தவர்கள் தமிழர்கள். அந்த தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டின் நாயகனாக போற்றி வழிபடப்படும் தெய்வம் தமிழ் கடவுள் என போற்றப்படும் “முருகன்”. உயரிய நெறிகளை போதிக்கும் தமிழர்களின் கடவுளான முருகனுக்கு ஏன் வள்ளி மற்றும் தெய்வானை என்கிற இரு மனைவியர் இருக்கின்றனர் என்கிற கேள்வி பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. இதற்கான விடையை தெரிந்து கொள்ளும் முன்பு சித்தர்களின் யோகம் மற்றும் தியானக்கலைகளின் சில தாத்பரியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

சித்தர்கள் கண்டுபிடித்த “பிராணாயாமம்” என்ற மூச்சு காற்றை சீர்படுத்தும் கலையில் வலது நாசி வழியாக வரும் மூச்சு காற்றை “சூரிய கலை” என்றும் இடது நாசியாக வரும் மூச்சு காற்றை “சந்திர கலை” என்றும் வகைப்படுத்தினர். இந்த இரண்டு நாசி துவாரங்கள் வழியாக ஒரே நேரத்தில் மூச்சு காற்று வரும் நிலையை “சுழுமுனை” என்கின்றனர். சுழுமுனை காற்று ஒரு மனிதன் ஞான நிலையடைய முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நடுப்பகுதியில் இருக்கும் 7 சக்கரங்களும் சுழுமுனை சுவாசத்தை சார்ந்தே இருக்கின்றன. இந்த இரண்டு வகையான மூச்சு காற்றையும் அடிப்படையாக வைத்து “இச்சா சக்தி” மற்றும் “கிரியா சக்தி” என இரண்டு சக்திகளாக வகைப்படுத்தினர் யோகிகள். பொதுவாக எல்லா சித்தர்களும் இச்சா மற்றும் கிரியா சக்திகளை பெண்ணாக பாவித்தே தங்களின் ஞான பாடல்களை பாடியிருக்கின்றனர். ஏனெனில் இந்த உலகம் பெண்ணை மையமாக கொண்டே இயங்குகிறது.

Thiyanam

பெண்கள் சார்ந்த வாழ்க்கை என்பது உலகியல் சார்ந்த வாழ்க்கை என சித்தர்கள் கருதுகின்றனர். ஆனால் நமது உடலுக்குள் ஓடும் சூரிய கலை மற்றும் சந்திர கலை, அதனால் உயிர் பெறும் இச்சா சக்தி கிரியா சக்தி என இரு பெண் சக்திகளை சமநிலை படுத்தி, உடலின் ஆறு சக்கரங்களுக்கு ஆதாரமாக இருக்கும் “சரவணபவ” எனும் மந்திரத்தை கொண்டு தியானிக்க, ஏழாவது சக்கரமான “சகஸ்ராரம்” எனும் சக்கரம் திறக்கும் போது முருகப்பெருமானின் காட்சி ஒருவருக்கு கிடைத்து அவர் சித்தர் அல்லது ஞானி ஆகிறார். முருகப்பெருமானின் இருமனைவியரில் “வள்ளி” சந்திர கலை எனப்படும் இடது நாசி மூச்சு காற்றையும், “தெய்வானை” சூரிய கலை எனப்படும் வலது மூச்சு காற்றையும் குறிப்பதாக அனுபவம் வாய்ந்த சில ஆன்மீக பெரியோர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிக்கலாமே:
விரைவில் கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திர குறிப்புகள், ஜோதிட பலன்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.