இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

sivanl

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. யாரும் எதிர்பாராத வண்ணமாக இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் திடீரென போர் மூண்டது. இந்த போரில் பங்கேற்க ஆகரில் இருந்த படையும் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த படைக்கு தலைமை தாங்கிச் சென்றார், லெப்டினன்ட் மார்ட்டின்.

soldiers

மார்ட்டின் போருக்கு சென்றிருந்தாலும் அவ்வப் போது தன்னுடைய மனைவிக்கு கடிதங்களை அங்கிருந்து அனுப்பி வந்தார். சில நாட்களுக்கு பிறகு கடிதம் வருவது நின்றுவிட்டது. அதோடு ஆப்கனின் படை வேகமாக முன்னேறுவதாகவும், அகப்படும் எதிரிப்படை வீரர்களை அவர்கள் கொடூரமாக துன்புறுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மார்டினின் மனைவி மிகவும் துயரத்திற்கு உள்ளானார்.

ஒருநாள் அவர் குதிரையில் ஏறி ஊரை சுற்றிபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிவன் கோவிலில் மக்கள் அதிகம் இருப்பதை கண்டார். உடனே குதிரையை விட்டு இறங்கி கோவிலுக்குள் சென்றார்.

alagar

அங்கிருந்த பூசாரியிடம், ஏன் இங்கு மக்கள் இவளவு கூட்டமாக இருக்கிறார்கள்? இது என்ன இடம் என்று கேட்டார். அப்போது அந்த பூசாரி, இது சிவன் கோவில் அம்மா, இங்கு மக்கள் தம் குறைகளை போக்க சிவனிடம் பிராத்தனை செய்கின்றனர். சிவனும் அவர்களுக்கு அருள்புரிகிறார் என்றார். இதை கேட்ட அந்த பெண்மணி, சிவன் என் குறையையும் போக்குவாரா? என் கணவர் போர்க்களம் சென்றுள்ளார், அவர் பத்திரமாக வர சிவன் வழி செய்வாரா என்று கேட்க, கண்டிப்பாக வழி செய்வார் தாயே, நமசிவாய என்னும் மந்திரத்தை நீங்கள் உச்சரிக்க வேண்டும் அதோடு சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் அவர் உங்கள் கணவர் உயிருக்கு ஒன்றும் நேராமல் பார்த்துக்கொள்வார் என்றார் பூசாரி.

- Advertisement -

sivan

பூசாரி சொன்னதை கேட்டு சிவனை வணங்க முடிவு செய்தார் அப்பெண். வேத வல்லுநர்களை கொண்டு சிவனுக்கு 11 நாட்கள் ருத்ராபிஷேகம் செய்தார். அதோடு ஒவ்வொரு நாளும் நீராடிவிட்டு முழு மனதோடு பூஜையில் கலந்துகொண்டார். 11வது நாள் பூஜை முடிந்து வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த பணியாள் அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார்.

அந்த கடிதம் அவரின் கணவரிடம் இருந்து வந்திருந்தது. அதை படிக்கையில் அவர் கண்கள் கலங்கின. சிவபெருமானை மனிதில் நினைத்து மகிழ்ந்தார். அந்த கடிதத்தில் அவரது கணவர் என்ன கூறியிருந்தார் என்றால், கடந்த 11 நாட்களாக போர் மிகவும் தீவிரமாக இருந்தது, எதிரிகள் எங்களை அவ்வப்போது சூழ்ந்தனர். ஆனால் அந்த சமயங்களில், ஜடாமுடியுடனும், கையில் சூலமும் வைத்திருந்த துறவி ஒருவர் என்னை வந்து காப்பாற்றினார். இந்த 11 நாட்களில் அவர் என்னை பல முறை காப்பாற்றினார். ஆனால் அவர் யார் என தெரியவில்லை. ஒருவழியாக போர் முடிந்தது நம் படை வெற்றி பெற்றது. விரைவில் வீடு திரும்புகிறேன் என்று எழுதி இருந்தார்.

இதையும் படிக்கலாமே:
சாய் பாபா எப்படி ? எப்போது ? முதல் முதலில் சீரடிக்கு வந்தார் தெரியுமா ?

பிறகு சில நாட்களில் வீடு திரும்பிய மார்டினிடம் அவரின் மனைவி நடந்ததை எல்லாம் கூற, தன்னை காப்பாற்றியது சிவபெருமான் தான் என்பதை அவர் உணர்ந்தார். பின் அந்த சிவபெருமான் கோயிலிற்கு சென்று அவர் வணங்கியதோடு ஒரு பக்கம் சிதிலமடைந்திருந்த அந்த கோவிலை சீர் செய்து கும்பாபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்தார். இந்த சம்பவம் நடந்தது 1879 ஆம் ஆண்டு. உஜைனியின் ஆகர் நகரில் உள்ள பைஜநாத் ஆலயத்தில் உள்ள சிவன் தான் இந்த அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர்.

தமிழ் கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.