துன்பங்களே இல்லாமல் வாழ வெறும் ஐந்து நிமிடம் வேலனுக்கு இதை செய்தால் போதும்.

murugan

நம் அனைவரது வாழ்விலும் இன்பம், துன்பம் எல்லாம் கலந்து தான் இருக்கின்றன. நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை குறைக்கவே தெய்வ சக்தி நமக்கு துணை நிற்கின்றது. நம் அனைவருக்கும் பிடித்தமான கடவுளான வேலன் கையில் வேலுடன் இருக்கிறார். அந்த வேலை அன்னை பார்வதி தேவி தன் முழு சக்தியை உள்ளடக்கி அசுரனை அழிக்க வேலனுக்கு கொடுத்த அங்குசம் ஆகும். அந்த வேலானது நம் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை எல்லாம் எப்படி போக்கும் என்பதைப் பற்றி தான் நாம் இங்கே இப்போது விரிவாக பார்க்கப் போகின்றோம்.

Murugan_ Swamimalai

வேலவனின் கையில் இருக்கும் வேலினை முறையாக அபிஷேகம் செய்வதன் மூலம் நம் கஷ்டங்களில் இருந்து விரைவில் விடுபடமுடியும். இறை நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் இதனை நீங்கள் வீட்டில் செய்ய வேண்டும்.

வேலவன் வீற்றிருக்கும் ஏதேனும் ஒரு தளத்திற்கு செல்லுங்கள். அங்கு விற்கும் பஞ்சலோக வேல் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். பின்னர் முருகப்பெருமானை தரிசித்து மனதில் உள்ள குறைகளை எல்லாம் நீக்கும்படி நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். அந்த வேலுக்கு தான் நீங்கள் பரிகாரம் செய்ய போகிறீர்கள்.

Lord Murugan Vel

பின்னர் வீட்டிற்கு வந்ததும் பூஜை அறைக்கு சென்று ஒரு புதிய சிவப்பு வஸ்திரத்தை எடுத்து பூஜை அறையில் விரித்து வைத்து அதன்மீது ஒரு செம்பு கிண்ணம் வைத்து அதனுள் நன்றாக சுத்தம் செய்த பச்சரிசியை நிரப்பி வைக்கவும். நீங்கள் கொண்டு வந்த வேலை இப்போது அந்த பச்சரிசியில் சொருகி வைக்கவும். அதன் பின்னர் ஒரு சுபமுகூர்த்த நாளில் அல்லது ஒரு வளர்பிறை செவ்வாய் நாளில் கங்கை நீரால் அபிஷேகம் செய்து கொள்ளவும். பின்பு காய்ச்ச படாத தூய பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து அதன்பின் நன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் சுத்தமான துணியால் துடைத்துவிட வேண்டும்.

- Advertisement -

Lord Murugan Vel

பிறகு அந்த வேலுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இருபுறமும் இட்டுக் கொள்ள வேண்டும். வேலவனுக்கு உகந்த செவ்வரளி பூக்கள் கொண்டும், பன்னீர் ரோஜாக்களை கொண்டும் அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியமாக அவல், பொரி, கற்கண்டு, பழங்கள் முதலியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். அதன்பின்னர் ஊதுபத்தி ஏற்றி, தீபாராதனை காட்டி வேலவனுக்கு உரிய மந்திரங்கள், தோத்திரங்கள் அல்லது கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும். இவ்வாறு முறையாக 21 நாட்கள் பூஜை மற்றும் அபிஷேகம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை.

murugan

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத பிரச்சினைகள் அனைத்தும் இவற்றின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும். உள்ளம் உருக வேலவனை வேண்டிக்கொள்ளுங்கள். எந்த பிரச்சனைக்கும் நம்பிக்கையை மட்டும் தளர விட்டு விடாதீர்கள். நாம் எதை நம்புகிறோமோ அதுதான் நமக்கு தெய்வ சக்தி மூலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பரிகாரம் செய்வதனால் தள்ளிக்கொண்டே சென்றிருக்கும் திருமண தடை விலகும். குழந்தைப்பேறு வேண்டி காத்திருக்கும் தம்பதியருக்கு விரைவில் குழந்தை பிறக்கும். நீண்ட நாள் இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எவ்வளவு கோவிலுக்கு சென்றும் தீரவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vettil vel vazhipadu in Tamil. Murugan vel benefits. Vel pooja at home in tamil. Vel poojai valipadu Tamil . Murugan vel parigaram.