காலையில் எழுந்ததும் இந்த பொருட்களை எல்லாம் பார்த்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் தெரியுமா?

mahalakshmi-selvam-gold-coins

காலையில் எழுந்ததும் சில பொருட்களைப் பார்க்கும் பொழுது அதிர்ஷ்டம் நம் வீட்டு கதவை தட்டும் என்பது ஜோதிட நியதி. இன்றைய நாள் ராசியான நாளாக அமைய, காலையில் முதலில் எழுந்ததும் நம் உள்ளங்கையை பார்க்க சொல்வது வழக்கம். எழுந்ததும் மற்றவர்களை விட, முதலில் நம்முடைய முகத்தை நாம் கண்ணாடியில் பார்ப்பது அவ்வளவு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த சில பொருட்களைப் பார்க்கும் பொழுது செல்வவளம் மேலும் மேலும் பெருகும். அப்படியான பொருட்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mahalakshmi

நீங்கள் எந்த இடத்தில் தூங்க செல்கிறீர்களோ! அந்த இடத்தில், நீங்கள் தூங்கி எழுந்ததும் முதலில் பார்க்கும் சுவற்றில் சில நல்ல வைப்ரேஷன்களைத் தரும் படங்களை மாட்டி வைக்கலாம். உதாரணத்திற்கு செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமியின் படத்தை அந்த இடத்தில் ஒட்டி வைத்தால் போதும். நீங்கள் எழுந்திருக்கும் பொழுது முதல் கண்பார்வை மகாலட்சுமியின் மீது விழும். இதனால் உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் நல்ல எண்ணங்களை பிரதிபலிக்க செய்யும் என்பது நம்பிக்கை. நாமும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற உள் உணர்வு பெருகும்.

நல்ல எண்ணங்களை விதைக்கும் அறிவு சார்ந்த சில படங்களை ஒட்டி வைப்பதும் ஞானத்தை வளர்க்கும் படியாக அமையும். காலையில் தூங்கி எழுந்ததும், தங்க நாணயங்கள் அல்லது தங்க, வைர நகைகள் போன்றவற்றை பார்க்கும் பொழுது செல்வ வளம் மென்மேலும் கூடும் என்பது நியதி. நீங்கள் தங்க நாணயங்கள் கொண்ட பொருட்களை அல்லது படங்களை உங்களுடைய படுக்கையறையில் வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும்.

ways to increase money in home

மேலும் ஒரு பானை நிறைய செல்வங்களும், தங்கங்களும் இருப்பதாக உள்ள படங்களை மாட்டி வைப்பது அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கும். இந்த படத்தை காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் பார்க்கும் பொழுது அன்றைய நாள் முழுவதும் நேர்மறையான ஆற்றல் பெருகும். பணவரவு அன்றைய நாளை சிறப்பாக அமைய செய்யும் என்று வாஸ்து ஜோதிடம் கூறுகிறது. குபேரன் படம், மகாலட்சுமியின் திருவுருவப் படங்கள் பதித்த காலண்டர்கள் மாட்டி வைக்கலாம்.

- Advertisement -

அதுபோல் பணம் சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உங்களுடைய உள்ளங்கையை பார்த்தபின் நேராக எழுந்து நீங்கள் பணத்தை வைத்து இருக்கும் இடத்திற்கு சென்று கையில் பணத்தை எடுத்து பாருங்கள். குறிப்பாக ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்க்க வேண்டும்.

sleep1

ஒவ்வொருவரும் தூங்கி எழுந்தபின் புது வாழ்வு போன்று உணர வேண்டும். உறக்கம் என்பது பாதி இறப்பதற்கு சமமானதாகும். தூங்கும் பொழுதே உயிர் பிரிவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே உறக்கம் என்பது கூட மறு ஜனனம் என்பது ஆகும். இரவு தூங்கி எழுந்தபின் ஒவ்வொரு விடியலும் புதிதானவை என்பதால் நாம் பார்க்கும் முதல் விஷயம் நமக்கு அன்றைய நாளை அதிர்ஷ்டம் தரக்கூடியதாக செய்ய வேண்டும்.

gopuram-2

ரூபாய் நோட்டுகள், தங்க நாணயங்கள், இசை வாத்தியங்கள், தெய்வீக பொருட்கள், சுவாமி படங்கள், கோவில் கோபுரங்கள், மழலை செல்வங்கள் போன்றவற்றை பார்க்கும் பொழுது இயல்பாகவே நமக்குள் ஒரு நல்ல வைப்ரேஷன் கிடைக்கும். அதன் பிறகு நாம் மற்ற வேலைகளை கவனிக்கும் பொழுது நேர்மறை சிந்தனையுடன் அந்த வேலையைச் செய்வோம். எனவே உங்களுடைய ஒவ்வொரு விடியலையும் சிறப்பாக மாற்ற நல்ல விஷயங்களை முதலில் பாருங்கள் நல்லதே நடக்கும்.