10/1/2020 நாளை சந்திர கிரகணம்: செய்ய வேண்டியது என்ன?

Chandra-grahan

விண்ணில் மனிதனுக்கு வியக்கத்தக்க வகையில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அவற்றை காண பெரும்பாலானோர் ஆவல் கொள்கின்றனர். வருடத்திற்கு 365.25 நாட்கள் இருந்தாலும் ஒரு சில நாட்கள் தான் விண்ணுலகில் நடக்கும் மாற்றங்களை நாம் கண்காணிக்கிறோம். அதுபோல் சென்ற மாதம் 26 ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தொடர்ந்து இந்த புத்தாண்டில் நாளை வெள்ளிக்கிழமை அன்று ஜனவரி 10, 2020 இல் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இதுவேயாகும். சூரிய கிரகணம் என்றாலும், சந்திர கிரகணம் என்றாலும் ஒரே மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

Chandra graganam

சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது சூரியனின் வெளிச்சத்தை சந்திரனிடமிருந்து பூமி பிரித்து பூமியின் நிழல் சந்திரனை மங்கச் செய்யும். இதை சந்திர கிரகணம் என்கிறோம். சந்திரகிரகணம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முழு சந்திர கிரகணம், பகுதி சந்திரகிரகணம், தெளிவற்ற சந்திரகிரகணம் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. அதில் நாளை நிகழ இருக்கும் சந்திரகிரகணம் தெளிவற்ற நிலையில் காணப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தொடக்கம் முதல் முடிவு வரை:
சந்திர கிரகணம் தொடங்கும் நேரம்: இரவு 10.39pm
முழுமையாக தெரியும் நேரம்: அதிகாலை 12:39am
சந்திர கிரகணம் முடியும் நேரம்: அதிகாலை 2.40am

Chandra graganam 2018

சுமார் 4 மணி நேரத்திற்கு இந்த சந்திரகிரகணம் நீடிக்க இருக்கிறது. சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி அன்று ஏற்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரிய கிரகணத்திற்கு தான் பிரத்தியேகமான கண்ணாடிகள் தேவைப்படும். சந்திரகிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கருவுற்ற பெண்கள் மற்றும் நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். நாளை நிகழவிருக்கும் சந்திரகிரகணத்தால் சந்திரனின் ஒரு பகுதி இருண்டு காணப்படும். இதற்கு நாசா விஞ்ஞானிகள் ஓநாய் சந்திரகிரகணம் என்று பெயரிட்டுள்ளனர். நாளைய இந்த பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் தொடங்குவதால் ஆருத்ரா தரிசனமும் இன்றைய நாளில் சிறப்பாக நடைபெறும்.

- Advertisement -

chandra grahanam

கடைபிடிக்க வேண்டியவை:
பொதுவாக கிரகணம் தொடங்கும் பொழுது குளிப்பது அவசியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. சந்திர கிரகணம் இரவில் நிகழ்வதால் குளித்து விட்டு உறங்கச் செல்வது நல்லது. அதுபோல் கிரகண நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது. சந்திரகிரகண மந்திரங்களை உச்சாடனம் செய்வது சிறந்த பலன்களை நல்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சாதாரண நேரத்தில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களை விட கிரகண நேரத்தில் உச்சரிக்கும் மந்திரத்திற்கு பலன் அதிகம் எனவே உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரித்து பலனடையுங்கள்.

Chandra-grahan-mantra

சந்திர கிரகணம் மந்திரம்:
ஆம் ஐம் க்ளீம் ஸோமாயா நமஹ

இந்த மந்திரத்தை சந்திர பகவானை மனதில் நிறுத்தி கிரகண நேரத்தில் உச்சரித்தால் நிறைய நல்ல பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – கடகம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chandra grahanam timings Tamil. Chandra grahanam do’s and don’ts Tamil. Chandra grahan palangal Tamil. Lunar Eclipse 2020.