மார்கழி மாதம் முழுவதும் இப்படி செய்தால், உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். நீங்கள் கேட்ட வரத்தை இறைவன் உடனே தந்து விடுவார்.

temple

மார்கழி மாதம் என்றால் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். குறிப்பாக வீட்டிலிருக்கும் பெண்கள், சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து வாசலில் கோலமிட்டு, அவரவர் வீட்டு வழக்கப்படி பூஜை அறையில், பூஜை செய்வது என்பது மிகவும் நல்ல விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் துயரங்கள் தீர வேண்டுமென்றால், இந்த மார்கழி மாத வழிபாடு உங்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

kolam

சரி, அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்க, நம்முடைய வாழ்க்கை விரைவாக முன்னேற்றம் அடைய, நம்முடைய வேண்டுதல் உடனடியாக இறைவனின் செடிகளில் விழ, எந்த வழிபாட்டை, எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி சூரிய உதயத்திற்கு முன்பு கண் விழித்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, மார்கழி மாதம் முழுவதும் காலைவேளையில் கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

குறிப்பாக, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவில்களில் எந்த கோவிலில் ஸ்தலவிருட்சம் இருக்கின்றதோ, அந்த கோவில்களுக்கு சென்று, அந்த மரத்தின் அடியில் அமர்ந்து 10 நிமிடங்கள் கண்களை மூடி, தியான நிலையில் உங்களது கோரிக்கைகளை இறைவனிடம் வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது.

praying-god

அரசமரம், வேப்பமரம், அத்தி மரம், வில்வமரம், இப்படியாக எந்த மரம் கோவில் வளாகத்தில் இருந்தாலும் சரி, அந்த இடத்திற்கு சென்று உங்களது வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த வேண்டுதல் நிச்சயம் இறைவனின் செவிகளில் விழும். கோவிலுக்கு சென்று உங்களால் வழிபாடு செய்ய முடியவில்லை எனும் பட்சத்தில், அரசமர இலையையோ, வேப்பமர இலையையோ, வில்வ இலையையோ அல்லது துளசி இலையை மட்டுமாவது உங்களது உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு வேண்டுதலை செய்யலாம்.

- Advertisement -

மொட்டை மாடி, பால்கனி போன்று வெளிக்காற்று உங்கள் மேல் படும்படி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, இந்த இலைகளில் ஏதாவது ஒரு இலையை உங்களது கையில் வைத்துக் கொண்டு, உங்களது வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொல்லி, வேண்டுதல் வைக்கும் பட்சத்தில் அந்தப் பிரார்த்தனை விரைவாக நிறைவேறும். முடிந்தவரை காலை 7:00 மணிக்கு முன்பாகவே உங்களது வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொல்ல பாருங்கள். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கண்விழிக்கும் பழக்கம் உங்களுக்கு வந்துவிட்டால், அதன் பின்பு வரும் காலங்களில் அதே பழக்கத்தை நீங்கள் பின்பற்ற தொடங்கி விடுவீர்கள்.

meditation

மார்கழி மாதம் மட்டும் அல்ல எந்த நாளாக இருந்தாலும், எவரொருவர் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்து விட்டு தன்னுடைய வேலையை தொடங்குகின்றாரோ, அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அதிவிரைவாக தான் இருக்கும். இருப்பினும் மார்கழி மாதத்தில் அறிவியல் ரீதியாக ஓசோன் வாயுவை சுவாசிப்பதன் மூலம் நமக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றது.

praying-god1

ஆன்மீக ரீதியாகவும் பிரபஞ்சத்தில் இருந்து பூமிக்கு கிடைக்கப்படும் தெய்வ சக்தியானது, மற்ற மாதங்களைவிட இந்த மாதத்தில் அதிகமாக கிடைக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் முதல் நாளான இன்று இந்த வழிபாட்டினை நீங்கள் தவற விட்டு இருந்தாலும், நாளையிலிருந்து முழு நம்பிக்கையோடு இதை செய்ய தொடரலாம். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம். உங்களுடைய வேண்டுதல்களுக்கு, அந்த ஆண்டவன் செவிசாய்க்காமல் இருக்கவே மாட்டார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள் வீட்டில், தீயசக்திகளும் எதிர்மறை ஆற்றலும், செய்வினையும் குடி கொள்ள வாய்ப்பே கிடையாது. அற்புதமான அந்த தீபத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.