மாசி மாத வெள்ளி கிழமையில் இதை செய்பவர்களுக்கு இதுவரை இருக்கும் தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும்! குறிப்பாக இந்த 1 நட்சத்திரகாரர்கள் மாசி வழிபாடு செய்தால் சகலமும் வசமாகும். அது என்ன நட்சத்திரம்?

temple-vilakku

தமிழ் மாதங்களில் சில மாதங்கள் மிகவும் விசேஷமானதாக கருதப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த மாசி மாதமும் எண்ணற்ற பலன்களை பக்தர்களுக்கு தந்தருள கூடிய மிகச் சிறந்த மாதமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு விசேஷமானது! அதே போல மாசி மாதம் இறை வழிபாடுகள் செய்வதற்கு உகந்ததாகும். குறிப்பாக இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமானது. அந்த கிழமைகளில் என்ன செய்யலாம்? என்ன செய்தால் சகல செல்வங்களும் நமக்கு கிடைக்கும்? என்பது தான் இந்த கொண்டு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள விருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

praying-god1

எப்பொழுதோ செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேட நினைப்பவர்கள் இந்த மாதத்தில் புனித நீர்நிலைகளில் நீராடினால் பெரும் புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம். மாசி மாதத்தில் நதிகள், ஆறுகள், குளங்கள், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடிவிட்டு குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொண்டால் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாக்கித்தரும்.

மாசி மாதம் வரும் செவ்வாய்க் கிழமையில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது குல தெய்வ அருளை உங்களுக்கு கிடைக்க செய்யும். நீர்நிலைகளில் நீராடி விட்டு வந்து வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும். குல தெய்வ மந்திரங்கள் உச்சரித்து குலதெய்வத்திற்கு உகந்த சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபடலாம். குலதெய்வ அருள் பெற மண்பானையில் பச்சரிசியை நிரப்பி அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மலர்களால் அலங்காரம் செய்து குலதெய்வத்தை ஆவாஹனம் செய்யலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் குலதெய்வம் மாசி மகம் அன்று அதீத புண்ணிய பலன்களை கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

kuladheivam

அதேபோல மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை முன்னோர்கள் வழிபாடு செய்வது தொழில் தடை, வருமான தடை, வியாபார தடை, குல விருத்தியில் தடை, சுபகாரியத் தடைகள் போன்ற எந்த வகையான தடைகளையும் தகர்த்து எறியும் வல்லமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மாசி மாத வெள்ளிக்கிழமையில் முன்னோர்கள் படத்திற்கு மாலை சாற்றி அவர்களுக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்ய வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று தரும்.

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் இன்னும் கூடுதல் பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். மாசி மகம் விசேஷமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மாசி மகம் அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நமக்கு பதினாறு செல்வங்களையும், அழியாப் புகழையும் கொடுக்கக் கூடியது ஆகும். குறிப்பாக மகம் நட்சத்திரக்காரர்கள் மாசி மக வழிபாட்டை மேற்கொள்வது சகல, சவுபாக்கியங்களையும் கிட்ட செய்யும்.

stars

இம்மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமையில, பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் வருகிறது. அன்று மகம் நட்சத்திரக்காரர்கள் நீர்நிலைகளில் நீராடி விட்டு ஆலயங்களுக்கு சென்று இறை தரிசனம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். மகம் நட்சத்திரக்காரர்கள் மட்டுமல்ல மற்ற எல்லா நட்சத்திரகாரர்களும் இதனை செய்து பலனடையலாம்.