குக்கரில் தண்ணீர் குறைவாக வைத்து அடிக்கடி தீய விடும் பழக்கம் உங்களுக்கு இருக்குதா? இனிமே குக்கர் அடி பிடித்து, கருகிப் போனாலும் கூட உள்ளே இருக்கும் பொருளில், கருகிய வாடை வீசவே வீசாது. இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா.

cooker
- Advertisement -

நிறைய வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குக்கர் அடிக்கடி அடியில் கருகிவிடும். அதாவது குறைவாக தண்ணீரை வைத்து, பருப்பு வேக வைக்கும் போது, இந்த பிரச்சனை வரும். அப்படி இல்லை என்றால் குக்கர் சரியாக விசில் வராமல் போனால், பருப்பு, பிரியாணி, குஸ்கா எது செய்தாலும் அடிபிடித்து விடும். இப்படி எதிர்பாராமல் அடிபிடித்து விட்டால் உள்ளே இருக்கும் பொருளை மேலும் மேலும் கருக விடாமல் பாதுகாப்பது எப்படி என்பதை பற்றியும், உள்ளே இருக்கும் பொருளில் அந்த கருகிய வாடை வீசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

குக்கரில் கருகிய உணவை சரி செய்வது எப்படி?
அடுப்பில் குக்கரில் ஏதோ ஒரு பொருளை வைத்து வேக வச்சிட்டீங்க. கருகிய வாடை வந்துவிட்டது. கண்டுபிடித்த உடன் அடுப்பை அணைத்து விட்டீர்கள். உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா. ஒரு அகலமான தட்டில் அல்லது அகலமான பேஷன் எது இருக்கிறதோ, அதில் பச்சை தண்ணீரை ஊற்றி, அந்த பச்சை தண்ணீரில் இந்த சூடாக இருக்கும் குக்கரை வைக்க வேண்டும். குக்கரின் அடிபாகத்தில் பச்சை தண்ணீர் பட்டதும் குக்கரின் சூடு உடனே தணியும். அடியில் இருக்கும் பொருள் இன்னும் இன்னும் கருகாமல் இருக்கும்.

- Advertisement -

குக்கர் பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பார்ப்போம். அடியில் இருக்கும் கருகிய உணவு பண்டத்தை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. மேலாக இருக்கும் உணவுப்பொருளில் அந்த கருகிய வாடை வீசாமல் இருப்பதற்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணனும். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் சீவி நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

குக்கருக்கு உள்ளே இருக்கும் எந்த உணவு பண்டமாக இருந்தாலும் சரி அதில் வெட்டிய இந்த வெங்காயத் துண்டுகளை லேசாக சொருகி வைத்து குக்கரை மூடி ஐந்து நிமிடம் விட்டு விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து வெங்காயத்தை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு மேலே இருக்கும் பருப்பாக இருக்கட்டும், பிரியாணியாக இருக்கட்டும் அப்படியே எடுத்து சாப்பிட்டால் அதில் கருகிய வாடை வீசவே வீசாது. ஒருவேளை இந்த பச்சை வெங்காயத்தின் வாடை அந்த உணவுப் பொருளில் வீசுமோ என்ற சந்தேகம் கூட உங்களுக்கு வேண்டாம். கருகிய வாடையை எல்லாம் இந்த வெங்காயம் ஏற்றுக்கொள்ளும். வெங்காயத்தின் வாசனை அந்த உணவுப் பொருளில் நிச்சயம் வராது.

அடி பிடித்ததை மட்டும் அப்படியே விட்டுவிட்டு, மேலாக இருக்கும் பருப்பை எடுத்து சாம்பார் வைத்தால் கூட ருசியாக இருக்கும். சாம்பாரில் நிச்சயம் கருகிய வாடை வீசவே வீசாது. மேல் சொன்ன இந்த எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். ஆனால் குக்கரை அடிக்கடி இப்படி அடியில் கருகும் படி செய்யக்கூடாது. தண்ணீர் இல்லாமல் போனால் குக்கர் வெடிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் பச்சரிசியில் கொஞ்சம் கூட புழுங்கல் அரிசியே சேர்க்காமல், சாப்டான இட்லி செய்யலாம் தெரியுமா?. வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்!

பின்குறிப்பு: தினமும் சமைத்த பிறகு குக்கருடைய விசிலை தனியாக எடுத்துவிட்டு, அந்த ஓட்டையில் ஏதாவது அடைப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஓட்டைக்கு மேல் பக்கம் மட்டுமல்ல, தட்டுக்கு கீழ்ப்பக்கத்தில், விசில் போடும் இடத்தில் இருக்கும் அந்த நாபில் சுற்றி 3 ஓட்டைகள் இருக்கும், அந்த ஓட்டையில் இருக்கும் அடைப்பை கூட சரி பார்க்க வேண்டும். சமைத்து முடித்தவுடன் கேஸ் கட் என்று சொல்லும் அந்த ரப்பரையும் கழட்டி கழுவ வேண்டும். குக்கரை சரியாக பராமரித்தால் மட்டுமே வரக்கூடிய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

- Advertisement -