மாவிளக்கு தீபம் ஏற்றும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்த தெய்வத்திற்கு இந்த நாளில் மாவிளக்கு தீபத்தை ஏற்றி வழிபட்டு பாருங்கள். உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.

maavilakku valipadu
- Advertisement -

கடவுள் வழிபாட்டில் முதன்மை இடம் வகிக்கக்கூடியது தீபம் தான். தீபம் ஏற்றாமல் எந்த கடவுளையும் நம்மால் வழிப்பட இயலாது. தீபத்தில் அனைத்து சக்திகளும் குடியிருக்கின்றன. முக்கியமாக முப்பெரும் தேவியரும் தீபத்தின் இருப்பதால்தான், எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் நாம் தீபத்தை முதலில் ஏற்றி வைத்து பிறகுதான் பூஜையை ஆரம்பிக்கின்றோம். அப்படி ஏற்றக்கூடிய தீபங்களில் சில தீபங்கள் வேண்டுதலுக்காக ஏற்றக்கூடிய தீபமாக இருக்கும். வேண்டுதல் தீபங்களில் முதலிடம் வகிக்கக்கூடியது மாவிளக்கு தீபம். பொதுவாக அம்மன் கோவிலில் மாவிளக்கு தீபம் ஏற்றுவார்கள். இந்த மாவிளக்கு தீபத்தை எந்த தெய்வத்திற்கு எப்படி, எந்த நாளில் ஏற்றினால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆடி மற்றும் தை மாதங்கள் அம்மனுக்குரிய மாதங்களாக கருதப்படுகிறது. அந்த மாதங்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக அனைத்து அம்மன் ஆலயங்களிலும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. சிலர் தங்கள் இல்லங்களில் இந்த மாவிளக்கு தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். அப்படிப்பட்ட இந்த அம்மனுக்குரிய மாவிளக்கு தீபத்தை நாம் ஆஞ்சநேயருக்கு ஏற்றினால் அவர் நம்முடைய கஷ்டங்களையும், துன்பங்களையும், துயரங்களையும் நீக்கி வளமான வாழ்வை அருள்வார்.

- Advertisement -

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக கருதப்படும் தெய்வங்களும் ஆஞ்சநேயரும் ஒருவர். அவரை நாம் பல விதங்களில் வழிபடுவோம். அவருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை வைத்து மாலை அணிவித்தும் வழிபடுவோம். அதில் ஒன்றுதான் வெற்றிலை மாலை. வெற்றிலை மாலையை அணிவித்து நாம் வழிபட்டால் நமக்கு வெற்றிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்பொழுது இந்த வெற்றிலையும் மாவிளக்கு வைத்து எந்த நாளில் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

ஆஞ்சநேயருக்கு உகந்த நாள் என்று சொன்னதும் நம் அனைவரின் நினைவிற்கு வருவது சனிக்கிழமை தான். அதே போல் ஆஞ்சநேயருக்கு உரிய நட்சத்திரம் என்று சொல்லும்போது அது மூல நட்சத்திரம் தான். ஏனென்றால் அவர் மூல நட்சத்திரத்தில் தான் அவதரித்தார் என்பதால் மூல நட்சத்திர நாளன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாம் வழிபடும்போது இந்த மாவிளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 11, 16, 21 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை சுற்றி அடுக்கிக் கொள்ளுங்கள். நடுவில் 2 வெற்றிலைகளை வைத்து அதன் மீது ஒரு மாவிளக்கை வைக்க வேண்டும். அதில் சுத்தமான நெய்யை ஊற்றி, ஒன்று அல்லது ஐந்து பஞ்சு திரிகளை போட்டு மாவிளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திருமண வயதை கடந்தும் இன்னும் மணம் ஆகாமல் துன்பப்படுகிறார்வர்கள் இந்த ஒரு எளிய தானத்தை செய்தால் உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் மணவாழ்க்கை விரைவில் அமையும்.

இவ்வாறு நாம் மாதாமாதம் வரக்கூடிய மூல நட்சத்திர நாளன்று ஆஞ்சநேயருக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து துன்பங்களும், துயரங்களும் விலகி நன்மைகள் உண்டாவதற்கான வழிகளை அவர் காட்டி அருள் புரிவார்.

- Advertisement -