இனி இட்லிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்க வேண்டிய அவசியமே இல்லை, நினைச்ச உடனே சட்டுனு பஞ்சு போல இட்லி ரெடி பண்ணலாம். எப்படின்னு தானே யோசிக்கிறீங்க ? அப்ப வாங்க உடனே தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் அதற்கும் கவலை இல்லாத அளவிற்கு கடைகளில் பாக்கெட் மாவு இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் வீட்டில் மாவு இருக்காது அதே நேரத்தில் யாராவது வந்து விட்டால் உடனடியாக என்ன செய்வது என்று குழப்பம் ஆகி விடும். அந்த நேரத்தில் சட்டு என்று இது போல மாவு தயார் செய்து இட்லி தோசை செய்து கொடுத்து விடலாம். அந்த மாவை எப்படி தயார் செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இன்ஸ்டன்ட் தோசை மாவு தயார் செய்ய தேவையான முக்கியமான பொருள் பொரி. இந்த பொரியை எந்த கப்பில் அளக்கிறீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து கொள்ளுங்கள். அப்போது தான் அளவுகள் சரியாக இருக்கும். வாங்க இப்போது மாவை தயார் செய்து விடலாம்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் தோசை மாவு தயார் செய்யும் முறை
இந்த மாவை தயார் செய்ய இரண்டு கப் பொரி எடுத்துக் கொள்ளுங்கள். பொரி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொரியாக இருந்தால் நல்லது. அப்போது தான் இட்லி வெள்ளையாக பூ போல் இருக்கும் இல்லை என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பொரியை இரண்டு கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இது லேசாக ரவை பதம் போல் இருக்கும் இதற்கு மேல் அரைப்படாது. இத்துடன் சேர்த்து ஒரு கப் ரவையும் சேர்த்து மறுபடியும் ஒரு முறை அரைத்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு இதில் கால் கப் அளவிற்கு தயிரை சேர்த்து அதையும் ஒரு முறை அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

அரைத்த மாவை பௌலில் மாற்றிய பிறகு, அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் ஈனோ சேர்த்து கொள்ளுங்கள். ஈனோ இல்லை என்றால் சமையல் சோடா பயன்படுத்தலாம். ஈனோ சேர்த்தால் உடனடியாக மாவு புளித்து விடும். சமையல் சோடா சேர்த்தால் பத்து நிமிடம் மாவை புளிக்க வைத்த பிறகு, பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஈனோ கலந்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளுங்கள். மாவின் மீது இருக்கும் நுரைகள் எல்லாம் அடங்கும் வரை மாவை அடிக்க வேண்டும். அப்போது தான் இட்லி நல்ல சாப்டாக வரும். அவ்வளவு தான் மாவு தயாராகிவிட்டது.

இப்போது இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்த பிறகு, இட்லி தட்டில் இட்லி ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தோசையும் இதே மாவில் ஊற்ற வரும். தோசை ஊற்றுவதென்றால் அதற்கு ஏற்றவாறு மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனிப்பும் காரசாரமும் கலந்த ஹோட்டல் டேஸ்ட் தேங்காய் சட்னி இப்படித்தான் அரைக்கணுமா? இது தெரிஞ்சிகிட்டா இனி அடிக்கடி இப்படியே தேங்காய் சட்னி செய்வீங்களே!

இந்தப் பொருட்கள் எல்லாம் உங்களிடமிருந்தால் இந்த மாவு தயாரிக்க 10 நிமிடம் என்பதே அதிகமான நேரம் தான். அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கும் நேரம் மட்டும் தான் சட்டு என்று மாவு தயாராகி விடும். இனி அவசரத்திற்கு மாவு இல்லை என்றால் பதறாமல் இப்படி மாவு தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -