இனிப்பும் காரசாரமும் கலந்த ஹோட்டல் டேஸ்ட் தேங்காய் சட்னி இப்படித்தான் அரைக்கணுமா? இது தெரிஞ்சிகிட்டா இனி அடிக்கடி இப்படியே தேங்காய் சட்னி செய்வீங்களே!

thengai-coconut-chutney1_tamil
- Advertisement -

ஹோட்டலில் தேங்காய் சட்னி சாப்பிட்டு இருக்கிறீர்களா? இட்லி, தோசையுடன் கெட்டியாக கொடுக்கப்படும் இந்த தேங்காய் சட்னி கொஞ்சம் இனிப்பும், காரசாரமும் கலந்த சுவையில் இருக்கும். மேலும் சாப்பிட சாப்பிட அள்ளி எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கணும்னு தோணும். ஆனால் அதை நாம் வீட்டில் செய்யும் போது அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி நம் வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவைப் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – இரண்டு, இஞ்சி – 2 இன்ச், கருவேப்பிலை – இரண்டு கொத்து, முந்திரி பருப்பு – 10, சின்ன வெங்காயம் – 2, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று, பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, சின்ன வெங்காயம் – ஒன்று.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
இந்த தேங்காய் சட்னி செய்வதற்கு அரை மூடி அளவிற்கு தேங்காயை பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வைத்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேங்காயுடன் பொட்டுக்கடலைக்கு பதிலாக முந்திரி பருப்புகளை சேர்த்தால் ஹோட்டல் சுவையில் செம டேஸ்டாக இருக்கும். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி சேருங்கள். பிரஷ்ஷாக பச்சையாக இருக்கக்கூடிய கருவேப்பிலையை இரண்டு கொத்து அளவிற்கு காம்பிலிருந்து உருவி சேருங்கள்.

- Advertisement -

பின்னர் இரண்டு சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுமையாக அப்படியே சேர்த்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்கும் பொழுது ஹோட்டல் சுவையில் உங்களுக்கு இனிப்பும், காரமுமாக தேங்காய் சட்னி இருக்கும். பின்னர் கொஞ்சம் போல தண்ணீர் விட்டு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸ் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு கெட்டியாக வேண்டுமோ, அவ்வளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கழுவி ஊற்றி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன வெங்காயத்தை மட்டும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
2 கப் ரேஷன் பச்சரிசி இருந்தா போதும் மெத்து மெத்துன்னு சாஃப்டாக பஞ்சு போல பன் தோசை இப்படி கூட வித்தியாசமாக செய்து அசத்தலமே!
பின் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். வர மிளகாய் ஒன்றை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக கிள்ளி சேருங்கள். பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக முருக விடுங்கள். பின் இவற்றை சட்னியில் கொட்டி கலந்து வையுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் சட்னி ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் இனி அடிக்கடி தேங்காய் சட்னி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க!

- Advertisement -