பணம் சேர இந்த செடியில் இருக்கும் குச்சியை உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொண்டால் போதுமே!

purse-madhulai

மகாலட்சுமி ஒரு சில பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அந்த வகையில் இந்த ஒரு செடியிலும் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வதாக புராணக் கூற்றுகள் உள்ளன. அந்த செடியின் வேர் முதல் நுனி வரை அத்தனையும் தெய்வீக அம்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பணம் வைக்கும் இடத்தில் தாந்த்ரீக பொருட்களை வைக்கும் போது பணம் மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த செடியின் குச்சியை பர்ஸில் வைத்தால் பணம் அதிகமாக சேருமாம். அது என்ன பொருள்? என்று இனி இப்பதிவில் காண்போம்.

nelli-maram1

நெல்லி மரம், மருதாணி மரம், மாதுளை செடி போன்றவை மகாலட்சுமி வாசம் செய்யும் தெய்வீக செடி வகைகள் ஆகும். நெல்லி மரத்தை வளர்ப்பவர்களுக்கு வாழ்வை பணக்கஷ்டம் என்பதே வராது என்பது ஐதீகம். எங்கிருந்தாவது பணம் பல வழிகளிலும் அவர்களுடைய வீட்டில் வந்து சேரும். குபேரனுடைய நாடு, நகரம் எல்லாம் பறி போன பொழுது அவற்றை மீட்டு எடுக்க மகாவிஷ்ணுவிடம் கேட்ட பொழுது, ஸ்ரீமன் நாராயணனே நெல்லி மரத்தை வளர்க்க கட்டளையிட்டார். நெல்லி மரத்தை வளர்ப்பது மகாலட்சுமி தேவியை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதற்கு சமமாகும்.

அதே போல தான் மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு எந்த துன்பமும் அண்டுவதில்லை. வீட்டில் சண்டை, சச்சரவுகள் வீணாக ஏற்படுவதும் இல்லை. மருதாணி செடியை சரியான திசையில் வைத்து வளர்ப்பவர்களுக்கு வாழ்க்கையில் புதிய புதிய வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் உயரத்திற்கு சென்று விடுவார்கள். இத்தகைய சக்தி வாய்ந்த மருதாணி செடியை அனைவரும் வீட்டில் வளர்க்கலாம்.

madhulai

இந்த வரிசையில் மாதுளை செடியில் இருக்கும் மகாலட்சுமி உடைய அருள் கிடைக்க, அந்த செடியில் இருந்து ஒரே ஒரு கிளையை சிறிதளவு வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய குச்சி இருந்தால் கூட அளப்பரிய பலன்களை கொடுக்கும். இதனை வீட்டில் அல்லது தொழில் ஸ்தாபனங்களில் வைக்கலாம். உங்களுடைய மணி பர்சில் மாதுளை குச்சியை வைத்துக் கொண்டால் பணம் வீண் விரயம் ஆகாமல் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் பீரோவில் நீங்கள் பணம் வைக்கும் இடம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டியில் சிறிய மாதுளம் குச்சி ஒன்றை வைத்தால் மேலும் மேலும் நகையும், பணமும் சேரும் என்பது நம்பிக்கை. நகை வைக்கும் பெட்டியில் பச்சை கற்பூரம், மல்லிகைப்பூ, மாதுளை குச்சி மூன்றையும் சேர்த்து வைத்தால் நகை அடகு போகாமல் இருக்கும். மேலும் மேலும் நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் பூஜை செய்யும் பொழுது கற்பூர ஆரத்தியை பீரோவிற்கும் சேர்த்து காண்பிக்க வேண்டும்.

madhulai 5

அது போல தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் கல்லாப்பெட்டியில் ஒரு பச்சை நிற பட்டுத்துணியில் அல்லது மஞ்சள் நிற காட்டன் துணியில் மாதுளை குச்சியை உடைத்து வைத்து முடிப்பாக கட்டிக் கொள்ள வேண்டும். இதனை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் விரைவாக பணம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி பெறும். புதிய புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மென்மேலும் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.