தமிழ்நாட்டுல இவங்களையும், இவங்க சேனலையும் தெரியாதவங்களே இருக்க முடியாது. மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி, யூடியூப் சேனல் ஆரம்பிச்ச கதையை நீங்களும் கொஞ்சம் கேளுங்களேன்.

- Advertisement -

தமிழ்நாட்டில் மட்டும் இல்லைங்க, இந்த உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வசித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் Madras Samayal சேனலும், ஸ்டெஃபியும் நிச்சயம் பிரபல்யம் தான். அந்த அளவிற்கு இந்த சேனல்  யூட்யூபில் அதிகப்படியான பார்வையாளர்களை சேர்த்து வைத்துள்ளது. கிட்டத்தட்ட இன்று 4 மில்லியன் சப்ஸ்கிரஸ் இந்த சேனல்ல இருக்காங்க. மெட்ராஸ் சமையல் சேனல் உருவான கதையையும், இந்த மெட்ராஸ் சமையல் சேனல் உருவாவதற்கு காரணமாக இருந்த ஸ்ஃடெபி அவர்களைப் பற்றியும் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

madras-samaiyal3

ஸ்டெஃபி அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகர்கோவிலில் தான். திருச்செங்கோடில் உள்ள பள்ளியில், ஹாஸ்டலில் தங்கி தான் தன்னுடைய பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிப்பினை படிப்பு முடிக்கிறார்கள். வீட்டில் தினந்தோறும் அம்மாவின் கையில், அம்மா சமைக்கும் சாப்பாட்டை சாப்பிடும் போது யாருக்குமே அதனுடைய அருமை பெருமைகள் தெரியாது. ஹாஸ்டலில் தன்னுடைய அம்மா கைப் பக்குவத்தை ரொம்ப மிஸ் பண்ணி இருக்காங்க ஸ்டெஃபி அவர்கள்.

- Advertisement -

அடுத்தபடியா பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இன்ஜினியர் முடிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவாக இருந்தது. சென்னையில் ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி தான் தன்னுடைய என்ஜினீயரிங் படிப்பை முடிக்கிறார்கள். அப்போதும் ஹாஸ்டல் சாப்பாடு. படித்து முடித்து சென்னையில் HCL கம்பெனியில் வேலை. இரண்டு வருடங்கள் வேலை செய்யும் போதும் தனியாக வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருக்காங்க. அப்போவும் சரியான சாப்பாடு கிடையாது. இவங்களே தான் சமைத்து, இவங்களே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதியதாக சமையலில் சில விஷயங்களை முயற்சி செய்து, நன்றாக சமைத்து நல்ல பாராட்டையும் அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட வாங்கி இருக்காங்க.

madras-samaiyal1

இயல்பாகவே ஸ்டெஃபிக்கு சாப்பாடு என்றால் மிகவும் இஷ்டம். சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இவர்கள் நன்றாக சாப்பிடும் வயதில், நன்றாக சாப்பிடக்கூடிய காலகட்டத்தில் அம்மாவின் சமையலை சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு இருக்காங்க. இரண்டு வருடம் வேலை செய்த பின்பு இவர்களுக்கு திருமணம் நடக்கின்றது. இவர்களது கணவர் USல் நல்ல வேலையில் இருக்கிறார்.  திருமணமானவுடன் ஸ்டெஃபி தன்னுடைய வாழ்க்கையை USல்  ஆரம்பிக்கிறாங்க.

- Advertisement -

இன்ஜினியரிங் முடிச்சாச்சு நல்ல வாழ்க்கையும், நல்ல கணவரும் அமைந்துவிட்டது. ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் எதையுமே சாதிக்க வில்லையே, என்ற எண்ணம் மட்டும் இவர்களுடைய மனதில் இருந்தது. என்ன செய்வது என்று சிந்தித்தபோது, அதாவது ஸ்டெஃபி தன்னுடைய வாழ்க்கையில் தான் எதை இழந்தாங்களோ, அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

madras-samaiyal2

ஸ்டெஃபி நல்ல சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டது போல, மற்றவர்களும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக யூட்யூபில் சுலபமான முறையில் எல்லோரும் சமைக்கும் படியான, சமையல் சம்பந்தப்பட்ட வீடியோக்களை போடவேண்டும், யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் இவர்களுக்கு தோன்றி இருக்கின்றது. இவர்கள் முதலில் classic masala hut என்று ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிச்சிருக்காங்க.

madras-samaiyal4

அதன்பின்பு 2015ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மெட்ராஸ் சமையல் யூடியூப் சேனலை ஆரம்பிச்சு, வீடியோவை போட தொடங்கி இருக்காங்க. ஸ்டெஃபியுடைய மாமியார், அம்மா இரண்டு பேருமே நன்றாக சமைப்பார்கள். அவர்களிடம் இருந்து சமையல் குறிப்புகளை வாங்கி சமைத்து வீடியோவை போட்டு யூடியூபில் தனக்கென ஒரு இடத்தையும் இன்னைக்கு பிடிச்சிருக்காங்க. ஸ்டெஃபியுடைய கணவரும் இவங்கள ரொம்பவே ஊக்கப்படுத்தி இருக்காரு.

madras-samaiyal5

நல்லா படிச்சாச்சு, நல்ல கணவரும் அமைந்து ஆகிவிட்டது. காசு சம்பாதித்து தான் ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருப்பினும் தன்னுடைய வாழ்க்கையில், தன்னை பாதித்த ஒரு விஷயத்தையே, தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு காரணமாக எடுத்துக்கொண்டு, ஸ்டெஃபி அவர்கள் பயணித்த இந்த பாதை எல்லா பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.

- Advertisement -