குழந்தைகளுக்கு பேச்சு குறைபாடுகள் நீங்க, கிரக தோஷம் தீர இங்கு சென்று வழிபடுங்கள்

amman
- Advertisement -

இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்பது இறை நம்பிக்கையாளர்களின் கருத்தாகும். மிக பழங்காலந்தொட்டே பெண் தெய்வ வழிபாடு நமது பண்பாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் மிகப்பழமையான நகரமும், 51 சக்திபீடங்களில் ஒன்றான மதுரை மாநகரத்தில் பழமையான பல பெண் தெய்வ கோயில்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் சிம்மக்கல் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில். அக்கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Mariamman

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த பேச்சியம்மன் திருக்கோயில். இந்த கோயிலின் தெய்வமாக இருக்கும் சக்தி தேவி பேச்சியம்மன் எனும் பெயரில் அழைக்கப்படுகிறாள். கோயிலின் தல விருட்சமாக ஆல மரம் இருக்கிறது. மிக பழமையான காலந்தொட்டே இந்த இடத்தில் பேச்சியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள் என கூறுகின்றனர் பக்தர்கள். கோயிலின் அம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாகும். ஆறடி உயரமுள்ள இந்த அம்மனின் விக்கிரகத்தை தரிசிக்கும் போது, நிஜமான ஒரு பெண் நேரில் வந்து நிற்பது போல் தோன்றுகிறது.

- Advertisement -

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் சிறப்புக்கள்

மதுரை மாநகரம் வழியே ஓடும் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்த பேச்சியம்மன் திருக்கோயில். இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக இருப்பது விஷேஷ அம்சம். இந்த கோயிலில் ஒரே இடத்தில் விநாயகர், முருகன், மீனாட்சி – சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகிய தெய்வங்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். இக்கோயிலில் நவராத்திரி, சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

MathuraKaliamman

இக்கோயிலில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. அத்துடன் மாலையில் குங்குமாபிஷேகம் நடக்கிறது. இதை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும். திக்குவாய் பிரச்சனை தீர, குழந்தைகளுக்கு சரிவர பேச்சு ஏற்படாத நிலை, சிறந்த பேச்சாற்றல் பெற விரும்புபவர்கள் இங்கு வந்து பேச்சியம்மனை வழிபடுவதால், அம்மனின் அருளால் மேற்கண்ட பிரச்சனைகள் நீங்க பெறுவார்கள்.

கோயில் அமைவிடம்

- Advertisement -

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் சிம்மக்கல் பகுதியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில்
பேச்சியம்மன் படித்துறை
சிம்மக்கல்
மதுரை மாவட்டம் – 625001

இதையும் படிக்கலாமே:
குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கே வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Madurai pechi amman temple in Tamil. It is also called as Pechi amman kovil madurai in Tamil or Amman kovilgal in Tamil or Madurai kovilgal in Tamil or Pechi amman valipadu in Tamil.

- Advertisement -