மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! இப்படி ஒரு காரசாரமான சூப்பர் சட்னியை மிஸ் பண்ணிடாதீங்க.

chutney
- Advertisement -

மதுரையில் செய்யக்கூடிய காரசாரமான ஒரு தண்ணி சட்னியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது மிகவும் சுலபமான ஒரு சட்னி. இட்லியில் ஊற்றி சாப்பிட்டால், இட்லி தொண்டையில் இறங்குவதே தெரியாது. இட்லி மட்டுமல்லாமல் தோசை, மெதுவடை இவற்றிற்கு சைட் டிஷ் ஆக கூட சூப்பராக இருக்கும். பொட்டுக்கடலை தேங்காய் சட்னியை கொஞ்சம் வித்தியாசமாக செய்யப் போகின்றோம். மதுரை ஸ்டைலில், காரசாரமாக! அவ்வளவு தான். மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க. சிம்பிளான ரெசிபி. சூப்பரான ரெசிபி.

chutney1

மதுரை தண்ணி சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1/2 மூடி அளவு, பொட்டுக்கடலை 6 லிருந்து 7 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் 5 லிருந்து 6 காரத்திற்கு ஏற்ப, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, பூண்டு – 4 பல், தேவையான அளவு உப்பு. 10 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நைஸாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு பெரிய மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய், பொட்டுகடலை, புளி, பூண்டு, பச்சை மிளகாய், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் அரைக்க வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மைய அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னியில் ஒரு சொம்புக்கும் மேல் தண்ணீரை ஊற்றி தண்ணீராக கரைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும். இந்த சட்னிக்கு உப்பு காரம் புளிப்பு தூக்கலாக இருக்கும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

chutney2

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடானதும் கடுகு 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வரமிளகாய் – 2, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த பொருட்களெல்லாம் சிவந்த பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை கடாயில் சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கியவுடன் வெங்காயத்தில் 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள். இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும், தண்ணீர் பதத்தில் இருக்கும் சட்னியை கடாயில் ஊற்றி நன்றாகக் கலந்து, உடனடியாக வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். சூடான பாத்திரத்திலேயே இருந்தால் சட்னி சீக்கிரம் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. (அடுப்பை அணைத்து விட்டு சட்னியை ஊற்றவேண்டும் மறந்துவிடாதீர்கள்.)

chutney3

இந்தச் சட்னி கார சாரமான சுவையில் கொஞ்சம் வித்தியாசம் தெரியும். சுட சுட இட்லியை வைத்து, அதன் மேலே நிறைய சட்னியை ஊற்றி ஊற வைத்து அப்படியே இட்லியை சாப்பிட்டால் தொண்டையில் இட்லி இறங்கும் விதமே தெரியாது. மதுரையில் ரோட்டு கடைகளில் பிரபலமாக விற்கப்படும் இந்த சட்னியை நீங்க மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் செஞ்சு பாருங்க.

இதையும் படிக்கலாமே
மீதமான சாப்பாட்டில் ஒரு முறை இப்படி போண்டா செய்து பாருங்கள்! ஈவினிங் டீ போடும் டைம்ல டக்குன்னு ஒரு ஸ்நாக்ஸ் ரெடி!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -