மீதமான சாப்பாட்டில் ஒரு முறை இப்படி போண்டா செய்து பாருங்கள்! ஈவினிங் டீ போடும் டைம்ல டக்குன்னு ஒரு ஸ்நாக்ஸ் ரெடி!

bonda

நம்முடைய வீட்டில் சாதம் மீந்துவிட்டால், நிறைய பேர் அதை தாளித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். நிறைய பேர் புளி சாதம் செய்து வைப்பார்கள். இப்படி எல்லாம் இல்லாமல், கொஞ்சம் புது விதமாக போண்டா எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே மிகவும் சுலபமான முறையில், மாலை டீ போடும் நேரத்தில் இந்த போண்டாவை செய்து, உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து விட்டால் சாதமும் வீணாகாது. ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். வாங்க ரெசிபிக்கு போகலாம்.

rice

உங்களுடைய வீட்டில் 1 கப் அளவு சாதம் மீதம் ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் பொருட்களின் அளவு சரியாக இருக்கும். சாதம் எந்த அளவிற்கு மீதமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு உங்களுடைய வீட்டில் இந்தப் பொருட்களையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகு ஜீரகம் இரண்டும் சேர்த்து – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா தேவைக்கு ஏற்ப பொடியாக நறுக்கியது, பொட்டுக்கடலை மாவு – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன்.

bonda1

முதலில் மீதமான சாப்பாட்டை உங்கள் கைகளை வைத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். சாப்பாட்டை பிசையும் போதே போண்டாவிற்க்குத் தேவையான உப்பையும் சாப்பாட்டில் சேர்த்து விடுங்கள். அதன் பின்பு ஒவ்வொன்றாக வெங்காயம், கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகு சீரகம், பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி தழை புதினா, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, ரவை இந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

- Advertisement -

கையில் சாப்பாடு ஒட்டத்தான் செய்யும். முதலில் எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து விட்டு, கையை கழுவி விடுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக கையில் எண்ணெயை தொட்டு, இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

rava-bonda4

கடாயில் இந்த போண்டாவை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்றாக வேண்டும். அதன் பின்பு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, போண்டாக்களை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வித்தியாசமான சுவையில் வித்தியாசமான போண்டா ஐந்தே நிமிடத்தில் தயாராகி இருக்கும். இதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்திருப்பதால் எண்ணெயும் அதிகமாக பிடிக்காது. உங்களுடைய வீட்டில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த போண்டாவை எதில் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
கையில் பணமே தங்க வில்லையா? பசுவிடமிருந்து கிடைக்கும் இந்த ஒரு விளக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கோடு எரிப்பதால் கெட்டவை நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.