- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சூப்பரான மதுரை ஸ்பெஷல் 'வெள்ளை அப்பம்' எப்படி செய்வது. இந்த ஸ்பெஷல் ரெசிபியை நீங்க தெரிஞ்சுக்க...

சூப்பரான மதுரை ஸ்பெஷல் ‘வெள்ளை அப்பம்’ எப்படி செய்வது. இந்த ஸ்பெஷல் ரெசிபியை நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

- Advertisement -

மதுரை ஸ்பெஷல் வெள்ளை அப்பம் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெள்ளை அப்பம் என்றால் போண்டா போல தான். ஆனால் அரிசி ஊற வைத்து, உளுந்து ஊற வைத்து ஆட்டி பக்குவமாக செய்ய வேண்டும். எந்தெந்த அளவுகளில் அரிசி உளுந்தை சேர்த்து எப்படி பக்குவமாக மதுரை ஸ்பெஷல் வெள்ளை அப்பம் செய்வது என்பதை பற்றிய தெளிவான விளக்கம் உங்களுக்காக இந்த பதிவில்.

arisi

முதலில் 1 கப் அளவு பச்சரிசி, 1 கப் அளவு இட்லி அரிசி, 1/2 கப் அளவு உளுந்து இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த 3 பொருட்களும் ஒரே கப்பில் தான் அளக்கப்பட வேண்டும். பச்சரிசி சேர்ப்பதன் மூலம் இந்த அப்பம் வெள்ளையாக கிடைக்கும். இட்லி அரிசி சேர்ப்பதன் மூலம் அப்பம் சாஃப்டாகவும் கிடைக்கும்.

- Advertisement -

பச்சரிசியையும் இட்லி அரிசியையும் அளந்து ஒரே பாத்திரத்தில் போட்டு, 3 முறை கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி, 3 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். உலுந்தை தனியாக பாத்திரத்தில் போட்டு 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

vellai-appam1

ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுக்க வேண்டும். அரிசி மாவை கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். உளுந்த மாவை, உளுந்து வடைக்கு அரைப்பது போல கெட்டியாக அரைத்து, அரிசி மாவையும் உளுந்து மாவையும் உங்கள் கையைப் போட்டு நன்றாக கலந்து, இந்த மாவை 3 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு எக்காரணத்தைக் கொண்டும் ரொம்பவும் தண்ணீராக இருக்க கூடாது. கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.

- Advertisement -

அரைத்து, மூன்று மணி நேரம் புளித்த மாவில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு மாவை மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து, மீதியிருக்கும் மாவை பிரிட்ஜில் வைத்து விடுங்கள். தேவைப்படும்போது எடுத்து மீண்டும் அப்பம் சுட பயன்படுத்திக் கொள்ளலாம்.

vellai-appam2

இப்போது உங்களுக்கு தேவையான மாவை தனி பாத்திரத்தில் எடுத்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா. மாவை எவ்வளவு எடுத்து இருக்கிறீர்களோ, அதற்கு தகுந்த அளவு மிளகு, பொடியாக வெட்டிய தேங்காய் பல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து மாவுக்கு தேவையான உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டால், வெள்ளை ஆப்பம் சுடுவதற்கு மாவு தயாராகிவிட்டது.

vellai-appam3

அடுப்பில் ஒரு கடாயை வைத்து  அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக இருக்கும் மாவை உங்கள் கைகளாலேயே அப்படியே அள்ளி சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் விட வேண்டும். நீங்கள் எண்ணெயில் விட்ட அப்பம் அனைத்தும் பொன்னிறமாக சிவந்து வந்தவுடன், எடுத்து ஒரு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியோடு பரிமாற வேண்டியதுதான். சூப்பரான மதுரை ஸ்பெஷல் வெள்ளை அப்பம் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ்பண்ணாமல் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்