2021 புத்தாண்டு பலன்கள் – தனுசு ராசி

newyear-dhanusu

கடந்து செல்ல இருக்கும் 2020 ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து மீண்டு, வர இருக்கும் 2021-ஆம் ஆண்டில் 12 ராசிகளில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்? என்கிற ஆர்வத்துடன் இருப்பார்கள். உங்களுடைய ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது. சனி பகவான் இந்த ஆண்டு 12-வது இடத்தில் நின்று நான்காவது இடத்தை பார்வையிடுகிறார். ராகு ஆறாவது வீட்டிலும், கேது பதினோராவது வீட்டிலும் இருக்க, மற்ற கிரகங்கள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெயர்ச்சி ஆகி கொண்டே இருப்பார்கள். இந்த கிரகங்களின் அடிப்படையில் உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்று இப்பதிவில் பார்ப்போம்.

thanusu-rasi

குடும்பம்:
தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே அமைய இருக்கிறது. சனி பகவான் நான்காவது வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் சனியுடன் இணைந்து இருப்பதால் மங்கல நிகழ்ச்சிகள் மற்றும் பூர்வீக சொத்துக்களை புதுப்பிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைக்கூடி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களின் ஆசீர்வாதமும், அவர்களுடைய அன்பையும் பெறுவீர்கள்.

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படிப்படியான முன்னேற்றத்தை உங்களுடைய உழைப்பின் மூலம் நீங்கள் அடைவீர்கள். உங்களுடைய விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்க இருக்கிறது. மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அமோகமான வெற்றி கிடைக்கக்கூடிய யோகமும் உண்டாகும். சூரியன் பெயர்ச்சி ஆகும் பொழுது திடீரென நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நாணயமாக நடந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

maligai-prorutkal

உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். நீங்கள் உங்களுடைய தீவிர உழைப்பை கொடுத்தமைக்கு உரிய அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும். மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் உருவாகும்.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ஜூலை முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்றம் காணலாம். பட்ஜெட் வாழ்க்கை போய் ஓரளவுக்கு சாதாரண நிலைக்கு கொண்டு வந்து விடுவீர்கள். பெண்களுக்கு பணம் பல வழிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. கரைந்து வந்த வங்கி சேமிப்புகள் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பெரிய பெரிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை காண்பீர்கள்.

money

பெண்களுக்கு:
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் மன அமைதி பெறலாம். திருமணம் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும்.

ulunthu

பரிகாரம்:
தனுசு ராசிக்காரர்கள் சனிக் கிழமைகளில் உளுந்து தானம் செய்து வர நிறைய நன்மைகள் நடைபெறும். ஏழை எளிய மக்களுக்கு நீல நிற வஸ்திர தானம் செய்து வரலாம். லலிதா சகஸ்ரநாமம் வீட்டில் ஒலிக்க விட்டு வேலைகள் செய்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். பசுக்களுக்கு தீவனம் கொடுக்க பாவங்கள் நீங்கும்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்