- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்2 மினிட்ஸ் மேகி இப்படி கூட செய்யலாமா? 5 மினிட்ஸ் ஆனாலும் செம டேஸ்டா இருக்கும்...

2 மினிட்ஸ் மேகி இப்படி கூட செய்யலாமா? 5 மினிட்ஸ் ஆனாலும் செம டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மேகி மசாலா என்றால் ரொம்பவே விருப்பமான ஒரு உணவு வகையாக இருக்கிறது. ரெண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் மற்றும் அதில் கொடுத்திருக்கும் மசாலாவையும் போட்டு வெறுமனே கிண்டி கொடுப்பதற்கு பதிலாக இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க, ரொம்பவே அசத்தலாக இருக்கும். அருமையான மேகி மசாலா ரெசிபி எப்படி செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, சிக்கன் மசாலா – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, முட்டை – 2, மேகி – ரெண்டு பாக்கெட்.

- Advertisement -

செய்முறை விளக்கம்

மேகி மசாலா செய்வதற்கு தேவையான அளவிற்கு மேகி பாக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக சிவக்க வதங்க வேண்டும், அதன் பிறகு பெரிய தக்காளி பழம் ஒன்றை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு மசிய வதக்க விடுங்கள்.

வெங்காயம், தக்காளி அனைத்தும் மசிந்து வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா, அந்தக் கலவைக்கு மட்டும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மசாலா வாசம் போக கிண்டி விடுங்கள். இரண்டு நிமிடம் நன்கு பாத்திரத்தில் ஒட்டாதவாறு கலந்து விட்டதும் அதனை பேனில் ஓரமாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரெண்டு முட்டைகளை காலியாக இருக்கும் பக்கம் உடைத்து ஊற்றி வேக விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருந்தால் நன்கு வெந்து தனித்தனியாக பிரிந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் வெங்காய கலவை, முட்டை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். கடைசியாக மேகி பாக்கெட்டில் இருக்கும் மசாலாவையும் சேர்த்து ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து வரும் பொழுது மேகி நூடுல்ஸ் உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். நூடுல்ஸ் நன்கு வெந்து தண்ணீர் வற்றி வர வேண்டும். இடையிடையே கிண்டி விட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
நீங்க வைக்கிற ரசம் எப்போதும் விஷம் போல தான் இருக்குமா? இந்த பொடி போட்டு ஒருமுறை ரசம் வச்சு பாருங்க! நீங்க வைக்கிற ரசம் கல்யாண வீட்டு ரசத்தை போல மனமனக்கும்.

சாதாரணமாக நீங்கள் நூடுல்ஸ் செய்வதை விட, இது போல வெங்காயம், தக்காளி, முட்டை, மசாலா எல்லாம் சேர்த்து செய்யும் போது அதனுடைய ருசியே வித்தியாசமாகவும், ரொம்பவே டேஸ்டியாவும் நிச்சயம் இருக்கும். வீட்டில் உப்புமா கிண்டும் பொழுதே கூட வெங்காயம், தக்காளி, மசாலா சேர்த்து செய்யும் போது கிச்சடி போல சுவையாக இருக்கிறது. அதே போல இதுவும் அருமையான சுவையில் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். நீங்களும் இதே மாதிரி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, இனி அடிக்கடி மேகி வாங்கினா, இப்படித்தான் செய்வீங்க.

சற்று முன்