- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நீங்க வைக்கிற ரசம் எப்போதும் விஷம் போல தான் இருக்குமா? இந்த பொடி போட்டு ஒருமுறை...

நீங்க வைக்கிற ரசம் எப்போதும் விஷம் போல தான் இருக்குமா? இந்த பொடி போட்டு ஒருமுறை ரசம் வச்சு பாருங்க! நீங்க வைக்கிற ரசம் கல்யாண வீட்டு ரசத்தை போல மனமனக்கும்.

- Advertisement -

சில பேர் வைக்கிற ரசம் விஷம் போல தான் இருக்கும். வீட்டில் இருப்பவர்களே சொல்லுவார்கள். இது என்ன ரசமா, இல்லை விஷமா என்று. அந்த அளவிற்கு சொதப்பலான ரசத்தை வைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த ரசப்பொடி. இந்த ரசப்பொடியை அரைத்து வைத்துக் கொண்டால், எப்படி ரசம் வைத்தாலும் அந்த ரசம் சூப்பராக வரும். சூப்பரான ரசப்பொடி அரைப்பது எப்படி. அந்த ரசப்பொடியை வைத்து சூப்பரான ரசம் வைப்பது எப்படி. ரெசிபி இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

இந்த எல்லா பொருட்களையும் ஒரு டீ குடிக்கும் டம்ளரில் அளந்துக்கோங்க. வர மல்லி – 1/2 டம்ளர், துவரம் பருப்பு – 1/2 டம்ளர், வர மிளகாய் இரண்டாக கிள்ளி போட்டது – 1/4 டம்ளர்(6 நம்பர்), சீரகம் – 1/4 டம்ளர், மிளகு – 1/4 டம்ளர், கருவேப்பிலை – 1/4 டம்ளர், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்.

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் வறுத்து ஒரே தட்டில் கொட்டி நன்றாக ஆர வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி கை பொறுக்கும் சூடு வரும் வரை வறுத்து அதை தட்டில் மாற்றி விட வேண்டும்.

அடுத்தபடியாக துவரம் பருப்பை தனியாக போட்டு துவரம் பருப்பு லேசாக சிவந்து பொன்னிறம் வரும் வரை வறுத்து அதையும் தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து வரமிளகாயையும் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிளகு சீரகம், ஒன்றாக போட்டு 1 நிமிடம் வரை வருத்து இதையும் தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். கருவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 90% பொடி அரைபட்டால் போதும். இந்த பொடியை நன்றாக ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்தால் ஆறு மாதம் வரை கெட்டுப்போகாது.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்தயம் – 1/4 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து இடித்த பூண்டு பற்கள் – 6 போட்டு, ஒரு நிமிடம் போல வதக்கி, கரைத்த – 2 தக்காளி பழத்தை ஊற்றி, தேவையான அளவு – உப்பு போட்டு வதக்குங்கள்.

- Advertisement -

ஒரு நிமிடம் தக்காளி பழம் வதங்கினால் போதும். அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடி – 2 ஸ்பூன் போட்டு, இரண்டு வதக்கு வதக்கி விட்டு, உடனடியாக எலுமிச்சம் பழ அளவு புளியை கரைத்து, பளி தண்ணீரை இதில் ஊற்றி, 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, இதன் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 5 நிமிடத்தில் கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா பஞ்சு போல ரெடி! இதை வாயில் வைத்தால் கரைந்து போவதே தெரியாது. கேக்கு போல சூப்பரா இருக்கும்.

அடுப்பை மீடியம் ஃபிளிமில் வைத்து விடுங்கள். ரசம் லேசாக நுரை கட்டி கொதி வர பார்க்கும்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் சூப்பரான மனம் மணக்கும் ரசம் தயார். எப்போதுமே ரசம் வைத்தவுடன் நல்ல ருசி தராது. காலையில் வைத்த ரசத்தை மதியம் சாப்பிட்டால் சூப்பரான ருசியில் இருக்கும். உங்களுக்கு இந்த ரசம் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் ரசம் வைக்க தெரியாதவர்கள் ரசம் வைத்தாலும் சுவையாக வரும்.

சற்று முன்