உங்களுக்கு காரிய சித்தி உண்டாக, தீவினைகள் அகல இதை துதியுங்கள்

vinayagar

எளிமையான நிலையில் வாழும் மக்கள், அவர்கள் வேண்டியதை பெற ஆசை படுவதில் தவறில்லை. பிறருக்கு துன்பம் தராத எத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்து நமக்கு வேண்டிய காரியங்களை நாம் சாதித்து கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் அனைவருக்குமே முதல் முயற்சியிலே வெற்றி கிட்டுவதில்லை. அத்தகைய அவர்களின் முயற்சிக்கு இறைவனின் அருளாசி நிச்சயம் வேண்டும். அதை தரும் மகா கணபதி மந்திரம் இதோ.

vinayagar

மகா கணபதி மந்திரம்

மஹா கணபதிர் புத்தி ப்ரிய
ஷிப்ர ப்ரஸாதத ந ருத்ர ப்ரியோ
கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந

vinayagar

சிவனின் மூத்த புதல்வரான மகா கணபதிக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கணபதியாகிய விநாயகரை மனதில் நினைத்து 27 முறை துதிப்பது நல்லது. சனிக்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் நீங்கள் புதிதாக தொடங்கும் எந்த ஒரு காரியமும் சிக்கல்கள் தடைகள் ஏற்படாமல் வெற்றி பெறும். தீவினைகள் உங்களை பீடிக்காமல் காக்கும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும்.

vinayagar

- Advertisement -

மானிடர்களாகிய நமக்கு தெரிந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் முழு முதல் நாயகனாகிய கணபதி அல்லது விநாயக பெருமானையே நாம் முதல் கடவுளாக வழிபடுகிறோம். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய கணபதியையே வழிபடுகின்றனர். அப்படியான இந்த மகா கணபதியின் மந்திரத்தை துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய கஷ்டங்களையும் தீர்க்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Maha ganapathy manthiram in Tamil. It is also called as Ganapathy mantras in Tamil or Vinayagar mantras in Tamil or Vinayagar slokas in Tamil or Ganapathy manthirangal in Tamil.