உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் விரைவில் தீர சுலோகம் இதோ

hanuman

வாழ்க்கையில் எத்தகைய கஷ்டங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கேற்ப, அவர்களுக்கு கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதே அனுபவ உண்மை. இத்தகைய கஷ்ட, நஷ்டங்கள் ஒரு சிலருக்கு விரைவில் தீர்ந்து விடுகிறது. பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தீர்க்கும் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம் இதோ.

Hanuman

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்

உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம்

hanuman

ஏகபத்தினி விரதனாக இருந்த ஸ்ரீ ராமசாந்திர மூர்த்தியின் சேவகனாகிய ஸ்ரீ ராம ஆஞ்சநேயருக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வந்தால் நன்மையான மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கோ எப்படிப்பட்ட பிரச்சனைகள், கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை விரைவில் நீங்கும்.

- Advertisement -

ஸ்ரீராமாருக்காக எப்போதும் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருந்த ஒரு உன்னதமான பக்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர். ராமரின் நாமத்தை ஜெபிக்கும் எவரும் அனுமனாகிய ஸ்ரீ ஆஞ்சநேயரின் அன்பிற்கு பாத்திரமாகிறார்.ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் அருள் உங்களுக்கு கிடைக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் உண்டாகும். நாம் அனுமனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
வறுமை நிலை நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri rama anjaneya slokam in Tamil. It is also called as Hanuman mantra in Tamil or Anjaneyar manthirangal in Tamil or Prachanaigal theera slokam in Tamil or Hanuman manthirangal in Tamil.