உங்களுக்கு தடையற்ற பணவரவு, தங்க நகை சேகரம் உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்

laksmi-compressed-1

நமக்கு பொருள் வரவு எந்த அளவில் வந்தாலும், அதை விட அதிகம் தேவை என்று எதிர்பார்ப்போமே தவிர அதற்கு குறைவாக இருக்க கூடாது என்று தான் நாம் விரும்புவோம். தற்காலங்களில் அதிகரித்து வரும் விலைவாசி, சமசீரற்ற பொருளாதார நிலையால் தங்கு தடையில்லா பண வரவு இருக்க வேண்டும் என்ற பலரும் விரும்புகின்றனர். மேலும் பணத்தை விட உயர்ந்த தங்க நகைகள் வாங்கவும் விரும்புகின்றனர். இவை இரண்டையும் தரும் “மகாலட்சுமி துதி” இதோ.

mahalakshmi

மகாலட்சுமி துதி

ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி

பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி

lakshmi

திருமகளான மகாலட்சுமியை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை கூறி துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு தீபம் ஏற்றி, இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் உங்கள் தொழில், வியாபாரங்களில் தங்கு தடையற்ற பண வரவு அதிகரிக்கும். பொன் ஆபரணங்களின் சேகரம் ஏற்படும். வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும்.

- Advertisement -

Lakshmi pujai

பத்மம் எனப்படும் தாமரையின் மீது வீற்றிருக்கும் லட்சுமி தேவி உலகங்கள் அனைத்திற்கும் ஜகன்மாதாவாக இருக்கிறாள். திருமாலின் இதயத்தில் வாசம் செய்பவளாகவும், அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் வறுமை நீக்கி வளமை பெருக செய்யும் லட்சுமி தேவியின் கருணை ஈடு இணையற்றது. மகாலட்சுமி தேவியை தினமும் வழிபடுவர்களுக்கு வாழ்வில் அனைத்து கஷ்டங்களும், குறிப்பாக பொருள் சார்ந்த கஷ்டங்கள் எல்லாம் நீங்க பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
காரிய வெற்றி உண்டாக ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Maha lakshmi thuthi in Tamil. It is also called as Mahalakshmi mantra in Tamil or Mahalakshmi thuthi padal in Tamil or Lakshmi sloka in Tamil or Mahalakshmi slokam in Tamil or Lakshmi mathiram in Tamil.