- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமஹா சங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.

மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.

- Advertisement -

வாழ்க்கையில் நீங்கள் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு இருக்கும் பண கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து, கடன் சுமையெல்லாம் படிப்படியாக குறைந்து, வருமானம் படிப்படியாக உயர வேண்டும் என்றால், நாளைய தினம் வரவிருக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று லட்சுமி கணபதியை நினைத்து வீட்டிலேயே எளிமையான பூஜையை எப்படி செய்வது? ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

லட்சுமி கணபதி பூஜை

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே அதற்கு சிறந்த நேரம் மாலை நேரம் தான். நாளைய தினம் 22.8.2024 வியாழக்கிழமை அன்று மாலை 6:30 மணிக்கு மேல் உங்கள் பூஜை அறையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்றே உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் பூக்களால் சுவாமி படங்களை அலங்காரம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு வெற்றிலையின் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து அந்த 1 ரூபாய் நாணயத்தின் மேல் வைத்து, பூஜையறையில் வைத்து விடுங்கள். இந்த பூஜைக்கு அர்ச்சனை செய்ய கட்டாயம் அருகம்புல் தேவை. அருகம்புலால் விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் போது தான் செல்வ வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கொஞ்சம் அருகம்புல்லை உதிரி உதிரியாக எடுத்து தாம்பல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையாக அருகம்புல்லை எடுத்து அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்யும் போதும், பின் சொல்லக்கூடிய லட்சுமி கணபதி மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா!

நாளைய தினம் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று லட்சுமி கணபதியின் இந்த மந்திரத்தை உங்கள் வீட்டில் உச்சரித்தால் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை அத்தனையும் நீங்கும். செல்வ வளம் பெருகும். லட்சுமி கணபதியின் அருளால் நீங்கள் சீக்கிரம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவீர்கள். அருகம்புல் இல்லாமல் இந்த பூஜையை செய்யாதீங்க. அருகம்புல் ரொம்ப ரொம்ப முக்கியம். பூஜையை நிறைவு செய்து விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக பிள்ளையாருக்கு ஏதாவது நெய்வேத்தியம் வைத்து கற்பூர ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். மனதார பிரார்த்தனையும் வையுங்கள். வெள்ளிக்கிழமை வரை பூஜை அறையில் இருக்கும் மஞ்சள் பிள்ளையார் அப்படியே இருக்கட்டும். சனிக்கிழமை ஒரு சின்ன டம்ளரில் நல்ல தண்ணீரை எடுத்து மஞ்சள் பிள்ளையாரை கரைத்து விடுங்கள். அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு அடியில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பீரோவில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 22-08-2024 வாஸ்து நாள் பரிகாரம்

முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய் விளக்கு போட்டு பிள்ளையாருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து, சிதறு தேங்காய் உடைப்பது மிக மிக நல்ல பலனை கொடுக்கும். நிச்சயம் உங்கள் கஷ்டம் தீரும் வருமானம் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுவோம்.

சற்று முன்