மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

sivan4
- Advertisement -

மகா சிவராத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது, தூங்காமல் கண் விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வது. இன்றைய சூழ்நிலையில் எல்லோராலும் கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது சாத்தியமில்லாத காரியம். மகா சிவராத்திரி அன்று உங்களால் கண் விழிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பின் சொல்ல கூடிய இந்த வழிபாட்டை செய்யுங்கள். மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழுத்த பலனை நிச்சயம் உங்களால் பெற முடியும்.

மகாசிவராத்திரியில் கண்விழிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

இந்த வருடம் மகா சிவராத்திரியினது மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:20 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை காலை 6:00 மணி வரை இருக்கின்றது. இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் கோவில்களிலும் நான்கு கால பூஜை நடக்கும். இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் கையால் வில்வ இலைகளை வாங்கி கொடுத்து அந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

கோவிலுக்கு போய் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாது என்பவர்கள் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு அர்ச்சனைக்கு வில்வ இலைகளை வாங்கி கொடுத்துவிட்டு, சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்புங்கள். தவறு ஒன்றும் கிடையாது. வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப தண்ணீரை ஊற்றி வையுங்கள்.

அந்த டம்ளருக்குள் 2 வில்வ இலைகளை போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜையறைக்கு முன்பாக அமர்ந்து ஈசனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ‘ஓம் நமோ பகவதே ருத்ராய’ என்ற மந்திரத்தை எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். ஒரு மணி நேரம் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது.

- Advertisement -

கீழே ஒரு விரிப்பு விரித்துக்கொண்டு, சமணம் போட்டு அமர்ந்து, முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து, ஈசனை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். தரையில் அமர முடியாது என்பவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம் தவறு கிடையாது.

ஒரு மணி நேரம் இந்த மந்திரத்தை சொல்ல முடியாது என்பவர்கள் 108 முறையாவது குறைந்த பட்சம் கட்டாயம் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தர உதவியாக இருக்கும். சிவபெருமானின் ஆசியைப் பெற்றுத் தரவும் இந்த மந்திரம் உதவியாக இருக்கும். இறுதியாக சிவபெருமானுக்கு ஏதாவது நிவேதனம் வைத்து பூஜை அறையில் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாக சிவராத்திரி இரவு முழுவதும் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் அவ்வளவு பெரிய விளக்கு நம் வீட்டில் இருக்க வாய்ப்பு கிடையாது. சின்ன காமாட்சி அம்மன் விளக்கு அணையாமல் தீபம் எறிய வேண்டும் என்றால் இரவு முழுவதும் கண்விழித்து எண்ணெய் ஊற்ற வேண்டிய சிரமம் இருக்கும்.

ஆகவே விளக்கை பூர்த்தி செய்து விடுங்கள். தண்ணீரில் வில்வ இலைகளை போட்டு வைத்திருக்கிறீர்கள் அல்லவா அது மட்டும் சிவராத்திரி இரவு முழுவதும் உங்கள் பூஜை அறையில் இருக்கட்டும். பூஜை அறையில் ஒரு சின்ன மின்விளக்கு மட்டும் எரியட்டும்.

அந்தத் தண்ணீரில் இருக்கும் வில்வ இலை ரூபத்தில், அந்த சிவபெருமான் இரவு முழுவதும் உங்க வீட்டிலேயே இருப்பார். இந்த மகா சிவராத்திரி தினத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் அந்த ஈசனின் ஆசீர்வாதம் கிடைக்கும். மறுநாள் காலை எழுந்து மீண்டும் ஈசனை மனதார வணங்கி விட்டு, அந்த தண்ணீரை எடுத்து உங்க வீட்டில் இருக்கும் செடி கொடிகளுக்கு ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய கோதுமை பரிகாரம்

வில்வ இலையோடு ஊற்றிவிடலாம் தவறு ஒன்றும் கிடையாது. செடி இல்லை என்றால் மண் பாங்கான இடத்தில் கால் படாத இடத்தில் இந்த தண்ணீரை ஊற்றி விடுங்கள். வழிபாடு நிறைவடைந்தது. இந்த மகா சிவராத்திரி தினத்தில் மேல் சொன்ன வழிபாடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -