மகா சிவராத்திரி நேரத்தில் கட்டாயம் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்!

siva-lingam-abishegam
- Advertisement -

அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு அபிஷேக, அலங்காரங்கள், ஆராதனைகள் மிகவும் விசேஷமாக நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பாவ வினைகள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சிவன் கோவிலில் நடைபெறும் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் அனைத்து செல்வங்களையும் பெறலாம். வீட்டில் விரதம் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சொல்ல வேண்டிய முக்கியமான மந்திரங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Sivan-God

மகா சிவராத்திரி மந்திரம்:

சிவ பஞ்சாட்சரம்: ஓம் சிவயநம – யநமசிவ – மசிவயந – வயநமசி – நமசிவய

- Advertisement -

சிவபெருமானுடைய இந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பஞ்ச பூத சக்திகளையும் பெற முடியும். ஐந்து எழுத்துக்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விரல்களை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நம் ஐந்து விரல்களும் ஐந்து பூதங்களை அடக்கி ஆளும் சக்தி இந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது ஏற்படுகிறது. இதை கட்டாயம் இந்த நாளில் 108 முறை உச்சரிக்கலாம்.

sivan (1)

சிவன் மூல மந்திரம்:
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!

- Advertisement -

திருமூலர் அருளிய இந்த சக்தி வாய்ந்த மந்திரம் சிவனுடைய மூல மந்திரமாக கொள்ளப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இம்மந்திரத்தை உச்சரித்தால் எவ்விதமான துன்பங்களும் உங்களை விட்டு விலகி விடும்.

sivan-3

சிவ ருத்ர மந்திரம்:
ஓம் நமோ பகவதே ருத்ராய

- Advertisement -

பாவம் போக சொல்ல வேண்டிய மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

நீங்கள் செய்த பூர்வ புண்ணிய அடிப்படையில் தான் உங்களுடைய வாழ்க்கையும் அமைந்துள்ளது. அத்தகைய பாவ வினைகள் இருந்து மோட்சம் பெறுவதற்கு சிவனுடைய இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மகா சிவராத்திரி அன்று இம் மந்திரத்தை உச்சரித்தால் பலன்களும் இரட்டிப்பாகும்.

Sivan

சிவன் தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

சிவபெருமானுக்கு பார்வதி தேவி மற்றும் குழந்தைகள் இருந்தாலும், அவர் எப்பொழுதும் தியான நிலையிலேயே இருப்பார். தியான நிலையில் அமர்ந்து இந்த தியான மந்திரத்தை உச்சரிப்பவர்கள் சகலமும் வசமாகும் என்பது நியதி. சிவனருள் பெற கட்டாயம் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

chitra pournami sivan

சிவபெருமான் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே!
மஹாதேவாய தீமஹி!
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்!!

மந்திரங்களில் காயத்ரி மந்திரம் மிகவும் உயர்ந்தது ஆகும். மந்திரங்களுக்கு தலைவனாக இருக்கும் காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரங்கள் எதுவும் இல்லை என்று கூறலாம். அவ்வகையில் சிவனுடைய காயத்ரி மந்திரத்தை மகாசிவராத்திரியன்று உச்சரிப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.

Lord Sivan

எம பயம் நீங்க சிவன் மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

வாழ்வில் பயம் இல்லாமலும் தைரியமாகவும் இருக்க, எம பயம் நீங்க, தோல்வி குறித்த பயங்கள் நீங்க சிவனுடைய இந்த மந்திரத்தை இன்றைய நாளில் உச்சரிப்பது நல்ல பலனாக இருக்கும்.

- Advertisement -