நாளைய தினம் 26-2-2025 மகாசிவராத்திரி வரவிருக்கிறது. சிவனை கொண்டாடப்படும் ஒரே ராத்திரி இந்த மகா சிவராத்திரி தான். நம்முடைய உடலை, மனதை, ஆரா சக்தியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த ராத்திரியில் கட்டாயம் கண்விழிக்க வேண்டும். இந்த ஒரு இரவு கண் விழித்தால் போதும் ஆன்மீக ரீதியாக, ஜோதிட ரீதியாக, அறிவியல் ரீதியாக அத்தனை நல்லதும் நமக்கு கிடைக்கும்.
உங்களுக்கு ஆன்மீகத்தில், அறிவியலில், ஜோதிடத்தில் எதில் நம்பிக்கை இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யுங்கள். எதிலுமே நம்பிக்கை இல்லை என்றால் சிவன் மீது நம்பிக்கை வைத்து இரவு கண் விழித்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.
நாளை மகா சிவராத்திரி ஆன்மீக ரீதியாக பார்த்தால் எல்லாம் சிவமயம், என்று சொல்லி சிவனுடைய பாதத்தைச் சரணடைய கூடிய நாள், நாளைய தினம். விடிய விடிய சிவபெருமானை வழிபாடு செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதுவே ஜோதிட ரீதியாக பார்த்தால் நாளைய தினம் பூமி, நிலா, சூரியன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். இந்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் வைக்கக் கூடிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பதும் நம்பிக்கை. உங்கள் ஜாதக கட்டத்தில் கிரக ரீதியாக ஏதாவது கோளாறுகள் இருந்தால் அந்த தோஷங்கள் விலகவும் இந்த ராத்திரியில் ஈசனை வழிபாடு செய்யலாம்.
சிவராத்திரியில் அறிவியல் உண்மை
இதுவே அறிவியல் ரீதியாக பார்த்தால் நமக்கு இந்த ஒரு வருடத்திற்கு தேவையான நேர்மறை ஆற்றல் கிடைக்கக்கூடியது இந்த நேரத்தில் தான். பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடிய “ஈதர்” என்ற சக்திதான் இந்த பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஈதர் சக்தியானது பூமியை அதிவேகமாக வந்து அடையக்கூடிய நாள் தான் மாசி மாதம் வரவிருக்கும் மகா சிவராத்திரி. சூரிய ஒளி இருக்கும்போது இந்த ஈதர் சக்தி பிரபஞ்சத்தில் வேலை செய்யாது இரவு நேரத்தில் தான் ஈதர் பூமி முழுவதும் பரவி இருக்கும்.
ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த நேரமானது மாறுபடும். இந்தியாவில் சிவராத்திரி இரவு 12:00 மணி முதல் 12:45 மணி வரை இருக்கும் நேரத்தில், இந்த ஈதர் சக்தியானது ராக்கெட் வேகத்தில் வந்து சேருகிறது என்பதுதான் விஞ்ஞான ரீதியான உண்மை. இந்த நாளை நாம் சிவராத்திரி நாளாக கொண்டாடுகின்றோம். படுத்து உறங்கி விட்டால் இந்த ஈதர் சக்தியை நம்மால் அடைய முடியாது. அமர்ந்திருந்து முதுகு தண்டுவடம் நேராக இருக்கும் பட்சத்தில் இந்த ஈதர் சக்தியானது நம்மை அடைந்து விடும். இதன் மூலம் நம்முடைய உடம்பில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி ஆனது நீங்கி பாசிட்டிவ் எனர்ஜி ரீசார்ஜ் ஆகிவிடும்.
இந்த ஈதர் சக்தி ஒவ்வொரு நாளும் பூமிக்கு வரும். ஆனால் மிக மிக பொறுமையாக வரும். சைக்கிள் வேகத்தில் தான் பிரபஞ்சத்திலிருந்து பூமியை வந்து அடையும். ஆனால் இந்த மகா சிவராத்திரி இரவு குறிப்பிட்ட அந்த 12:00 மணியிலிருந்து 12:45 மணி வரை ஜெட் வேகத்தில் பூமியை வந்த அடையும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே சிவராத்திரி அன்று இந்த நேரத்தை மட்டும் யாரும் தவற விடாதீங்க.
கோவிலில் அமர்ந்தோ அல்லது வீட்டிலேயே இருந்தபடியே கண் விழித்து முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து ஈசனை வழிபடுங்கள். நிச்சயம் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லது நடக்கும். சரி, இப்போது ஆன்மீகத்திற்கு வருவோம். தினம் தினம் நம்மை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்த ஈசனின் ஆசிர்வாதத்தை பெற இந்த சிவராத்திரியில் என்ன பரிகாரத்தை செய்வது.
சிவராத்திரி நள்ளிரவு 12:00 மணியிலிருந்து 12:45 மணி வரை ஈசனை வழிபாடு செய்யும்போது, உங்களுடைய கைகளில் 2 வில்வ இலைகளையும், 1 ருத்ராட்சத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். வேண்டிய வரங்களை ஈசனிடம் கேளுங்கள். உங்களுக்கு தேவையான பிரார்த்தனையை வையுங்கள். கோவிலில் வெட்ட வெளியாக இடத்தில் அமர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த பிரபஞ்ச சக்தியானது உங்களுக்குள்ளும், உங்கள் கையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களுக்குள்ளும் வந்து ஐக்கியமாகிவிடும். வீட்டிற்கு வந்தவுடன் கையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும், விபூதி டப்பாவில் போட்டு விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெற
பிறகு அந்த விபூதியை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்வதன் மூலம் உங்களுக்கு ஈசனின் ஆசீர்வாதம் தினம் தினம் கிடைக்கும். நல்லதே நடக்கும். இந்த பூமியில் இப்போது தலை விரித்தாலும் கஷ்டம் பணகஷ்டம் அதிலிருந்து விடுபட பணத்தைப் போராடி சம்பாதிக்க உண்டான தெம்பு உங்களுக்கு கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.