சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு இருந்தாலும், இந்த கோவிலுக்கு செல்லலாம். ஆனால் சென்னையில் வசிப்பவர்களுக்கு, இந்த கோவில் அருகாமையில் இருக்கும். அதனால் தான் சென்னைவாசிகளுக்காக இந்த கோவில் பிரத்தியேகமாக சொல்லப்பட்டுள்ளது. எல்லாருக்கும் தெரிஞ்ச கோவில் தான்.
ஆனால் இந்த கோவிலில் இப்படி ஒரு சிறப்பு இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால், முருகர் கோவிலுக்கு தான் போவாங்க. ஆனா சென்னையில் மகாபலிபுரத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தாலும் சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
சொந்த வீடு வாங்க ஸ்தல சயன பெருமாள் கோவில்
மகாபலிபுரத்தில் இந்த ஸ்தல சயன பெருமாள் கோவில் இருக்கிறது. பெருமாளுக்கு இந்த பூமி ரொம்பவும் பிடித்ததால், அவர் நிலத்திலேயே படுத்து காட்சி தருகிறார். இதனால் தான் இவருக்கு இந்த கோவிலில் ஸ்தல சயன பெருமாள் என்று பெயர் வந்தது.
ஸ்தலம் என்றால் தரையிலேயே படுத்து கிடக்கும் பெருமாள். இந்த கோவிலில் இருக்கும் தாயாருக்கு நிலமங்கை தாயார் என்று பெயர். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர, நிலம் வாங்க, இந்த கோவிலும் ஒரு பரிகார ஸ்தலமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு நிறைய முறை சென்று வந்திருப்போம். ஆனால் இந்த கோவிலில் இப்படி ஒரு சிறப்பு இருப்பது நம்மில் பல பேருக்கு தெரியாமல் இருந்திருக்கும். வீடு வாங்க நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு, இந்த அரிய தகவலை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்த கோவிலுக்கு சென்று வீடு நிலம் வாங்க வேண்டும் என்று வேண்டுதலை வைத்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: பீஷண பைரவர் மந்திரம்
நிச்சயமாக உங்களுக்கான நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஸ்தல சயன பெருமாளின் அருள் ஆசியும், நில மங்கை தாயாரின் அருள் ஆசையும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.