மகாபாரத போரில் அணுகுண்டு பயன்படுத்தியது உண்மை தானா ? – இதோ ஆதாரம்

mahabharatham

1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் இறுதியில், ஜப்பான் நாட்டின் “ஹிரோஷிமா”, “நாகசாகி” நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் செய்த கொடூரம், மனித இனம் இப்பூமியில் உள்ளவரை மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். இன்று உலகின் பல நாடுகளும் அணு சம்பந்தமான ஆராய்ச்சிகளை தங்கள் நாட்டு பாதுகாப்பிற்காகவும், வேறு சில ஆக்கபூர்வமான காரியங்களுக்காகவும் மேற்கொள்கிறது. இந்நாடுகளெல்லாம் சமீப வருடங்களிலேயே இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன.

Mahabharatham

ஆனால் உலகின் பழமையான நாகரிகம் கொண்ட நம் நாட்டு முன்னோர்கள் இந்த அணுவைப் பற்றிய அறிவாற்றலில் கரைகண்டிருந்தனர். “மஹாபாரதப்” போரில் இந்த அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, “பிரம்மாஸ்திரம்” என்ற பெயரில் ஆயுதமாக பிரயோகிக்கப்பட்டதையும், இந்த பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் “கிருஷ்ண பரமாத்மா” எச்சரிப்பதைப் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன.

மேலும் மஹாபாரதப் போர் நடந்த இடமாகிய “குருஷேத்ரம்” பகுதி இன்றைய ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி துறையினர், 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, இரும்பினால் செய்யப்பட்ட பல வகையான ஆயுதங்களை கண்டெடுத்தனர். அந்த ஆயதங்களை ஆராயும் போது அவை சிறிய அளவிலான தீங்கில்லாத அணுக்கதிர் வீச்சுகளை வெளியிட்டுக் கொண்டிருந்ததாக கூறினார்கள் அவ்வாராய்ச்சியாளர்கள். ஒரு முறை வெடிக்கும் அணுகுண்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு கதிர்வீச்சை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அதன்படி பார்க்கும் போது மஹாபாரதத்தில் கூறப்படும் “பிரம்மாஸ்திரம்” என்பது அணுகுண்டு தான் என்றும், அது அப்பாரதப் போரில் பயன்படுத்தப்பட்டிருப்பது உண்மையே” என்றும் முடிவுக்கு வந்தனர் அந்த ஆய்வாளர்கள்.

Mahabharatham Arjunan

“அணுவைப் பிளந்து ஆழ்கடல் புகுத்தி சிறுகத் தரித்த குறள்” என்று “திருக்குறளை” பாராட்டும் வரிகளில் நம் தமிழ் மூதாட்டி “அவ்வையார்” பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார். “அணுவைப் பிளக்கும் தொழில் நுட்பத்தை”, நவீன மேற்கத்திய, அதிலும் குறிப்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டே அதை தெரிந்துகொண்டனர். ஆனால் நம் முன்னோர்கள் அதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பானின் அசுர சக்தி கொண்ட ராணுவத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், இந்த அணு ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, இந்த அணுவை, அணுகுண்டாக மாற்றி, அதை தன் எதிரி நாடுகள் மீது பயன்படுத்த முடிவு செய்தது.

Advertisement

Mahabharatham

இந்த அணுஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்க அணுவிஞ்ஞானி “ராபர்ட் ஒபென்ஹெய்ம்ர்” “ஹிந்து மத இலக்கியங்கள்” மீது அதிக ஈடுபாடு கொண்டவர். முதல் அணுகுண்டு சோதனையில் அது வெடிப்பதைக் கண்ட போது “ஆயிரம் சூரியனின் ஒலியையும், அத்தனை சூரியனின் வெப்பத்தையும் கொண்டது என அக்கால அணுகுண்டாகிய “பிரம்மாஸ்திரத்தை” பற்றி, பகவத் கீதையில் “கிருஷ்ண பரமாத்மா” கூறியது எவ்வளவு உண்மை” என்று கூறி ஆச்சரியமடைந்தார் ஒபென்ஹெய்ம்ர்.

Mahabharatham

இவர் தயாரித்த இந்த அணுகுண்டு ஜப்பானில், லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்த போது, “நானே மரணமாகிறேன்” என்று பகவத் கீதையில் கண்ணன் கூறிய வரிகளைக்கூறி, தன் செயலுக்கு மிகவும் வருந்தி, இனி எந்த ஒரு உலக நாடும் இத்தகைய ஆயுதங்களை உண்டாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிக்கலாமே:
பல நூறு ஆண்டுகளாக தானாய் எரியும் கோவில் தீபம் – காரணம் தேடி தவிக்கும் விஞ்ஞானிகள்

ஒரு மேற்கத்திய விஞ்ஞானி நம் நாட்டு “விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும்” போற்றும் போது, நம் நாட்டின் சில சுயநலவாதிகள், தங்கள் சுயநலத்திற்காக, நம் நாட்டின் அருமையான விஷயங்களை, நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அறியாதவாறு மறைத்து விட்டது காலத்தின் கொடுமை.