நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்புடன் நிறைவான வாழ்க்கையாக வாழ்வதற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. கஷ்டமும் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் சுடக்கு போடும் நேரத்தில் அதன் நிலை மாறிவிடும். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று மகாலஷ்மி வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களை வைத்து வழிபட்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருளாசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதையும் தவிர்த்து மகாலட்சுமியை வசியம் செய்வதற்காக பல பரிகாரங்களும் இருக்கின்றன. வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வரும் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ள வேண்டும். அது நிறைய சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். அவ்வாறு ஒரு ரூபாய் நாணயத்தை போடுவதற்கு முன்பாக “ஓம் யக்ஷாய கும்” என்னும் மந்திரத்தை ஆறு முறை உச்சரித்த பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை அதற்குள் போட வேண்டும்.
பிறகு அதில் சிறிது பச்சை கற்பூரத்தை போட வேண்டும். அடுத்ததாக நல்ல கிராம்பாக பார்த்து ஆறு கிராம்பை அதில் போட வேண்டும். அதற்கு மேல் சிறிது வெட்டிவேரை போட வேண்டும். வெட்டி வேருக்கு மேல் ஒரு நல்ல புள்ளி இல்லாத எலுமிச்சம் பழத்தை போட வேண்டும். இப்படி போட்ட இந்த கண்ணாடி டம்ளரை எடுத்து பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
இதை வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று மாற்ற வேண்டும். வெட்டிவேரை மட்டும் ஒரு மாதம் வரை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒவ்வொரு வாரமும் எடுத்து வைத்த அந்த ஒரு ரூபாய் நாணயம் ஒரு குறிப்பிட்ட தொகை வந்த பிறகு குலதெய்வ கோவிலுக்கு எடுத்துச் சென்று உண்டியலிலோ அல்லது அங்கு ஏதாவது காரியங்களுக்கு தானமாகவோ வணங்க வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வர மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். தீய சக்திகள் விலகி ஓடும். தெய்வ கடாட்சம் மேலோங்கும். வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. மன நிறைவோடு, மன நிம்மதியோடு வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: தெய்வ கடாட்சம் பெற தீப வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.