- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ

மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ

- Advertisement -

மகத்துவம் நிறைந்த மாதமாக திகழக்கூடியது புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதினாலும் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய நாட்களான நவராத்திரி நாட்களும் புரட்டாசி மாதத்தில் தான் வருகிறது. முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய மகாளய அமாவாசையும் புரட்டாசி மாதத்தில் தான் வருகிறது. அதனால் இந்த புரட்டாசி மாதம் தெய்வங்களையும் முன்னோர்களையும் வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதம் நிறைவடைவதற்குள் செல்வ செழிப்புடன் வாழ மகாலட்சுமி தாயாருக்கு எந்த பொருளைத் தரவேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்புடன் வாழ

மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று நம் அனைவருக்கும் தெரியும். மகாலட்சுமி தாயாரை நினைத்து அனைத்து தினங்களிலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் பெருமாளுக்கு உரிய நாட்களில் வழிபாடு செய்யும்பொழுது விரைவில் பலன் கிடைக்கும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்வதோடு மகாலட்சுமி தாயாரையும் சேர்த்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய புதன்கிழமை அன்று ஒரு சில பொருட்களை நாம் மகாலட்சுமி தாயாருக்கு வாங்கி தர வேண்டும். அப்படி தருவதன் மூலம் மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து நம்முடைய பண பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள். ஒருவேளை புதன்கிழமை வாங்கித் தர இயலவில்லை என்பவர்கள் வியாழக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ கூட வாங்கித் தரலாம். இந்த பொருட்களை மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கக் கூடிய ஆலயத்தில் தான் வாங்கித் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் புதன் ஹோரையில் சென்று இந்த பொருட்களை வாங்கித் தர வேண்டும். வியாழக்கிழமை சொல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் மாலை 5:30 மணிக்கு மேல் இந்த பொருட்களை வாங்கித் தரலாம். அதாவது குபேர நேரத்தில் வாங்கித் தரலாம். வெள்ளிக்கிழமை வாங்கி தருவதாக இருக்கும் பட்சத்தில் சுக்கிர ஹோரையில் வாங்கித் தரலாம். அந்த பொருட்கள் தான் பச்சை நிற புடவை, பச்சை நிற ரவிக்கை துணி, பச்சை நிற கண்ணாடி வளையல் மற்றும் மிகவும் வாசனை மிகுந்த பச்சை நிறமுடைய மரிக்கொழுந்து.

- Advertisement -

இந்த பொருட்களை நாம் மகாலட்சுமி தாயாருக்கு வாங்கி கொடுத்து நம்முடைய பெயரில் அர்ச்சனை செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம். இயன்றவர்கள் அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு மரிக்கொழுந்து மாலை கட்டி அணிவித்து வழிபாடு செய்வது கூடுதல் பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: தேவைகளை பூர்த்தி செய்யும் பூஜை

தங்களால் இயன்ற அளவு தெய்வங்களுக்கு செய்வதன் மூலம் தெய்வங்கள் நாம் செய்ததைப் போல பல மடங்கு நமக்கு திருப்பி செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான இந்த பொருட்களை வாங்கித் தந்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்